

தமிழகத்தில் வெங்காயத்தின் விளைச்சல் நல்ல நிலையில் இருப்பதால், இன்னும் 20 நாட்களில் அதன் விலை குறையும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் நேற்றிரவு (டிச.8) செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் வெங்காயத்தின் விலை உயர்ந்திருக்கிறது.
மழைக்காலம் என்பதால், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வெங்காயம் வரவேண்டிய சூழல் இருக்கிறது. வெங்காயம் வரத்து குறைந்ததால், அதன் விலை உயர்ந்தது. இன்னும் 15-20 நாட்களில் இந்த பிரச்சினை சரியாகிவிடும்.
தமிழகத்தில் வெங்காயம் விலைச்சல் நன்றாக இருக்கிறது. வெங்காயத்தின் விலை தமிழகத்தில் இன்னும் 20 நாட்களில் குறையும்" என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.