

உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக போட்டியிடும், வேட்பாளர்களை தேர்வு செய்து வருகிறோம் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக சீமான் இன்று அளித்த பேட்டி வருமாறு:
‘‘உள்ளாட்சி தேர்தலை சந்திக்க நாம் தமிழர் கட்சி தயாராக உள்ளது. ஊரக உள்ளாட்சி பதவிகளில் அனைத்து இடங்களிலும் போட்டியிடுவோம். உள்ளாட்சி தேர்தலுக்காக விருப்ப மனுக்களை பெற்றுள்ளோம்.
வேட்பாளர்களை தேர்வு செய்ய குழுக்களை அமைத்துள்ளோம். அவர்கள் வேட்பாளர்களை தேர்வு செய்து வருகிறார்கள்’’ எனக் கூறினார்.