சிறப்புப் பிரிவு கலந்தாய்வு: 18 பேருக்கு எம்பிஏ சேர்க்கை ஆணை - இன்று முதல் பொதுப் பிரிவு தொடக்கம்

சிறப்புப் பிரிவு கலந்தாய்வு: 18 பேருக்கு எம்பிஏ சேர்க்கை ஆணை - இன்று முதல் பொதுப் பிரிவு தொடக்கம்
Updated on
1 min read

கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் மாநில அளவில் அரசு இடஒதுக்கீட்டின் கீழ் சேருவதற்கு நடைபெற்ற சிறப்புப் பிரிவினருக்கான எம்பிஏ கலந்தாய்வில் 18 பேருக்கு சேர்க்கை ஆணை நேற்று வழங்கப்பட்டது.

கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் எம்சிஏ, எம்பிஏ பட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 27-ம் தேதி தொடங்கியது. முதற்கட்டமாக நடைபெற்ற எம்சிஏ படிப்புக்கான கலந்தாய்வில் பொறியியல் கல்லூரிகளில் 1,815 பேரும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 478 பேரும் சேர்க்கை ஆணை பெற்றனர்.

இதைத் தொடர்ந்து நேற்று முதல் எம்பிஏ (மேலாண்மை) படிப்புக்கான சேர்க்கை கலந்தாய்வு தொடங்கியது. ராணுவத்தினர், முன்னாள் ராணுவத் தினரின் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் பங்கேற்க 21 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில், 18 பேர் நேற்று பங்கேற்றனர்.

கட்-ஆப் மதிப்பெண் அடிப் படையில், மாற்றுத்திறனாளி மாணவி சத்யா முதலிடம் பிடித்து கோவை பிஎஸ்ஜி பொறி யியல் கல்லூரியில் எம்பிஏ சேர்க்கைக்கான ஆணையை பெற்றார். பங்கேற்றவர்கள் அனைவருக்கும் இடஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது.

சிறப்புப் பிரிவு எம்பிஏ கலந்தாய்வு முடிவடைந்த தையடுத்து, இன்று முதல் (ஆக.3) பொதுப்பிரிவினருக்கான எம்பிஏ கலந்தாய்வு தொடங்குகிறது. முதல் நாளில் 630 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வு ஆக.13 வரை நடைபெற உள்ளதாக கல்லூரி நிர்வாகத்தினர் தெரி வித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in