

வெங்காயத்தை முன்பு அரிந்தால் தான் கண்களில் கண்ணீர் வரும் ஆனால் தற்போது வெங்காய விலையைக் கேட்டாலே கண்ணீர் வருகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஆளுங்கட்சிக்கு விருப்பம் இல்லை. அதனாலேயே அதில் மறைமுகமாக எத்தனை குளறுபடி செய்ய வேண்டுமோ அத்தனை குளறுபடிகளை செய்து நீதிமன்றத்திற்கு யாராவது சென்று தேர்தலை நிறுத்த வேண்டும் என நினைக்கிறார்கள்.
ஆளும் கட்சிக்கு அச்சம் இல்லை என்று சொன்னால் நேர்மையான முறையில் தேர்தலை நடத்தலாமே.
ரஜினிகாந்த் மிகச்சிறந்த நடிகர். நான் கூட அவரது ரசிகர். அவர் கட்சி தொடங்கி கொடியை அறிவிக்கட்டும் அதன் பிறகு பார்க்கலாம்.
வெங்காயத்தை முன்பு அரிந்தால் தான் கண்களில் கண்ணீர் வரும் ஆனால் தற்போது வெங்காய விலையைக் கேட்டாலே கண்ணீர் வருகிறது" என்றார்.