Published : 08 Dec 2019 08:38 AM
Last Updated : 08 Dec 2019 08:38 AM

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரைவில் தேர்தல்: மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தகவல்

சென்னை

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு களுக்கான தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனிசாமி தெரி வித்தார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2-ம் தேதி வெளியிட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை ரத்து செய்துவிட்டு, புதிய தேர்தல் அட்டவணையை மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனிசாமி நேற்று வெளியிட்டார். அப்போது செய்தி யாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:

பொங்கல் பரிசு தொகுப்பு தமிழக அரசு வழங்கி வருகிறது. தேர்தல் நடத்தை விதிகளால் பாதிப்பு வருமா?

விதிகளின்படி ஏற்கெனவே நடைபெறும் திட்டங்கள் தொடர லாம். இதுகுறித்து பரிசீலிக்கப்படும்.

9 மாவட்டங்களுக்கான தேர் தலின்போதே நகர்ப்புற உள்ளாட்சி களுக்கும் தேர்தல் அறிவிக்கப் படுமா?

இரண்டு உள்ளாட்சி அமைப்பு களும் வேறு. உச்ச நீதிமன்ற உத்தர வுப்படி ஊரக உள்ளாட்சி அமைப்பு களுக்கு தேர்தல் நடைபெறும். நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும் தேர்தல் நடைபெறும். இரண்டையும் தொடர்புபடுத்தக் கூடாது.

நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படாததற்கு காரணம் என்ன?

நிர்வாகக் காரணங்களால்தான் அறிவிக்கப்படவில்லை. தேர்தல் நடத்தப்படும்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தர வால் தேர்தல் ஆணையத்துக்கு பின்னடைவா?

தேர்தல் ஆணையத்துக்கு பின்னடைவு ஒன்றும் இல்லை. நாங்கள் தேர்தல் நடத்த தயாராக இருந்தோம். உச்ச நீதிமன்றம் சில ஆணைகளைப் பிறப்பித்துள்ளது. அதைப் பின்பற்றி தேர்தல் நடத்துகிறோம். தேர்தல் ஆணை யம் நியாயமான முறையில் தேர் தலை நடத்த எல்லாவிதமான நட வடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

9 மாவட்டங்கள் மற்றும் நகர்ப் புற உள்ளாட்சிகளுக்கு எப்போது தேர்தல் நடத்தப்படும்?

விரைவில் நடத்தப்படும்.

தேர்தல் அறிவிக்கை நாள் உள்ளிட்டவை தற்போது மாறியுள்ளதே?

விதிகள்படி குறைந்தபட்சம் ஒவ் வொரு நடைமுறைக்கும் எத்தனை நாட்கள் ஒதுக்க வேண்டுமோ, அத் தனை நாட்கள் ஒதுக்கியுள்ளோம்.

இவ்வாறு மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனிசாமி பதில் அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x