

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மைத்துனர் கோ.ராஜரத்தினம் (86), வயது முதிர்வு காரணமாக நேற்று முன்தினம் இரவு காலமானார்.
கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளின் அண்ணன் கோ.ராஜரத்தினம். திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகில் உள்ள கோவில் திருமாளம் கிராமத்தில் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர்நேற்று முன்தினம் இரவு உயிரி ழந்தார்.
இவரது உடலுக்கு கருணா நிதியின் மகள் செல்வி, திருவாரூர்மாவட்ட திமுக செயலாளரும் எம்எல்ஏவுமான பூண்டி கே.கலைவாணன், எம்எல்ஏ மதிவாணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலை புங்கராயநல்லூரில் உள்ள மயானத்தில் ராஜரத்தினத்தின் உடல் தக னம் செய்யப்பட்டது. மறைந்த அவருக்கு பங்கஜம் என்ற மனைவி, வெளிநாட்டில் வேலை செய்துவரும் 1 மகன் மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.