தேசிய குடியுரிமை சட்டமசோதா மதப்பிளவை உண்டாக்கும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கண்டனம்

தேசிய குடியுரிமை சட்டமசோதா மதப்பிளவை உண்டாக்கும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கண்டனம்
Updated on
1 min read

வெங்காய விஷயத்தில் மட்டுமல்ல அனைத்து விஷயங்களிலும் மத்திய அரசு தோல்வியடைந்துள்ளது, என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தேசிய குடியுரிமை சட்டமசோதா கொண்டுவரப்படவுள்ளது. இதில் முஸ்லிம் மதத்தினரை தவிர மற்றவர்களுக்கு குடியுரிமை வழங்க உள்ளனர். இது மதப்பிளவை உண்டாக்கும்.

ஏற்கெனவே இந்தியாவில் ஒரு லட்சம் இலங்கை அகதிகள் உள்ளனர். அவர்களுக்கு குடியுரிமை வழங்க எந்த மசோதாவும் இதுவரை கொண்டுவரப்படவில்லை.

ஒன்பது மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தவேண்டாம் என ஆளுங்கட்சியே நீதிமன்றத்தில் சொன்னதால் எதிர்கட்சிகளின் புகார் உண்மை எனத் தெரிகிறது.

வெங்காய விஷயத்தில் மட்டுமல்ல அனைத்து விஷயங்களிலும் மத்திய அரசு தோல்வியடைந்துள்ளது. ஏழை எளிய பெண்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லாதசூழல் நிலவுகிறது.

தெலங்கானாவில் பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் நான்கு பேருக்கு நீதிமன்றம் மூலம் அதிகபட்சமான தண்டணை வழங்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் தண்டணை என்ற பெயரில் போலீஸாரே கொன்று இருப்பது சரியில்லை.

அரசியல் பின்புலம் இல்லாதவர்களுக்கு ஒருவிதமாகவும், அரசியல் செல்வாக்கு உள்ளவர்களுக்கு ஒரு விதமாகவும் உள்ளது. தவறு செய்தவர்கள் அனைவரையும் என்கவுன்ட்டர் செய்துவிடமுடியுமா. என்கவுன்ட்டர் என்பது ஒரு நேர்மையான முறையில்லை.

நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை குறைந்துவருவதால் இதுபோன்ற போலீஸாரின் நடவடிக்கையை மக்கள் வரவேற்பு தெரிவிக்கின்றனர், என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in