Published : 28 Aug 2015 08:07 AM
Last Updated : 28 Aug 2015 08:07 AM

3 நாட்களில் தங்கம் விலை ரூ.784 குறைவு: ஒரு பவுன் விலை ரூ.19,856க்கு விற்பனை

சர்வதேச அளவில் தங்கத்தின் விலை குறைவு, பங்குசந்தை சரிவு ஆகிய கார ணங்களால் கடந்த 3 நாட்களில் தங்கத்தின் விலை ரூ.784 குறைந்துள்ளது. இதனால், ஒரு பவுன் நேற்று ரூ.19 ஆயிரத்து 856க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஜூன் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.20 ஆயிரத்தில் இருந்து குறைந்தது. இதையடுத்து, சர்வதேச அளவில் தங்கத்தின் விலை அதிகரித்ததாலும், ரூபாய் மதிப்பு குறைந்ததாலும் கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்கமும் இருந்து வருகிறது. இதற்கிடையே, சர்வதேச அளவில் தங்கத்தின் விலை மீண்டும் குறைந்திருப்பதால் கடந்த 3 நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. கடந்த 25-ம் தேதியன்று ஒரு பவுனுக்கு ரூ.280, நேற்று முன்தினம் ரூ.208 எனவும், நேற்று ரூ.296 என மொத்தம் ரூ.784 குறைந்துள்ளது. நேற்று நிலவரப்படி 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.2,482க்கு விற்கப்பட்டது. ஒரு பவுன் ரூ.19 ஆயிரத்து 856க்கும் விற்கப்பட்டது.

இது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுசெயலாளர் எஸ்.சாந்தகுமாரிடம் கேட்ட போது, ‘‘சர்வதேச அளவில் தங்கத்தின் விலை குறைவு, பங்குசந்தை சரிவால் தங்கத்தில் முதலீடு செய்வது குறைந்துள்ளது. இதனால், சில நாட்க ளாக விலை குறைந்து வருகிறது. கடந்த 3 நாட்களாக அதிகமாக மக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அடுத்த சில நாட்களுக்கு தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்கமும் இருக்கும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x