Published : 07 Dec 2019 07:46 AM
Last Updated : 07 Dec 2019 07:46 AM

சென்னை முன்னாள் மேயர் வை.பாலசுந்தரம் காலமானார்: முதல்வர் பழனிசாமி இரங்கல்; திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சென்னை

அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவரும் முன்னாள் சென்னை மாநகர மேயருமான வை.பாலசுந்தரம் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 76.

கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலமானார். சென்னை தியாகராய நகர் சரவண முதலி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு்ள்ள உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன், முன் னாள் அமைச்சர் க.பொன்முடி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங் கல்: மறைந்த முதல்வர் ஜெயலலி தாவின் பேரன்பை பெற்றவரும் அதிமுகவுடன் தோழமை உணர்வு டன் செயல்பட்டு வந்தவருமான வை.பாலசுந்தரம் மறைவு செய்தி கேட்டு வருத்தமடைந்தோம். அவரை இழந்து வாடும் குடும்பத் தினர், தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தை யும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி: பட்டியலின - பழங்குடி யின மக்களின் பாதுகாவலராக மும்முரமாகப் பணியாற்றி - சென்னை மாநகராட்சியிலும் தமிழக சட்டப்பேரவையிலும் அவர் களின் உரிமைகளுக்காகவும் சமூக நீதி மற்றும் சமத்துவத்துக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் போரா டியதோடு அவற்றை நிறை வேற்றவும் பாடுபட்டவர் என்று தெரிவித்துள்ளார்.

அம்பேத்கர் மக்கள் இயக்கத் தலைவராகவும் சென்னை மாநகர மேயராகவும் 1971-ல் அச் சிறுப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ வாகவும் பணியாற்றினார். அவ ருக்கு பவானி என்ற மனைவியும் அனுப்பிரியா என்ற மகளும் உள்ளனர்.

தலித் மக்களுக்கான முன் னேற்றுத்துக்காக பாடுபட்ட வர். அவரது உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத் தில் அஞ்சலிக்காக வைக்கப்பட் டுள்ளது. இன்று மாலை மயிலாப் பூரில் உள்ள கிருஷ்ணாம்பேட்டை இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப் படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x