

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ள ஆர்.வளர்மதி மீது விரைவில் அவ தூறு வழக்கு தொடரப்படும் என்று காங்கிரஸ் அறக்கட்டளை உறுப்பின ரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டி.யசோதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று வெளி யிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக் கட்டளையில் தொலைபேசி உதவி யாளராக பணியாற்றிய வளர்மதி என்பவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அறக்கட்டளை உறுப்பினர் என்ற முறையில் இது குறித்து சில கருத்துகளை தெரிவிக்க விரும்புகிறேன்.
தொலைபேசி உதவியாளர் பணி தேவையில்லை என்பதால் கடந்த ஜனவரி 5-ம் தேதி அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு தொழிலாளர் நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் 5 மாதங் களுக்குப் பிறகு இளங்கோவன் உள்ளிட்டோர் மீது அவர் அளித்த புகார், பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. நீண்ட அரசியல் பாரம்பரியம் கொண்ட இளங் கோவன் வெளிப்படையாக பேசக் கூடியவரே தவிர, யாரையும் இழிவு படுத்தி பேசக்கூடியவர் அல்ல. காமராஜரால் உருவாக்கப்பட்ட காங்கிரஸ் அறக்கட்டளையின் பெருமையை இழிவுபடுத்தும் வகை யில் புகார் தெரிவித்துள்ள வளர்மதி மீது விரைவில் அவதூறு வழக்கு தொடரப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.