சிறுமிக்கு பாலியல் தொல்லை; ஏட்டுக்கு 5 ஆண்டுகள் சிறை: ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

சிறுமிக்கு பாலியல் தொல்லை; ஏட்டுக்கு 5 ஆண்டுகள் சிறை: ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

Published on

சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தலைமைக் காவலருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ராமேசுவரம் தனிப் பிரிவு தலைமைக் காவலராகப் பணியாற்றியவர் சரவணன்(45). இவர் ராமேசுவரம் காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவரது வீடு அருகே உள்ள 10 வயது சிறுமியை 22.1.2018-ல் பாலியல் தொந்தரவு செய்தார். இவர் மீது போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) டி.பகவதியம்மாள், தலைமைக் காவலர் சரவணனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.9,000 அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். சரவணன் தற்போது வரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in