

திண்டுக்கல் அருகே வத்தலகுண்டு பஸ் நிலையத்தில் பயணிகள் கண்ட இடங்களில் தூக்கி வீசும் குப்பைகளை மனநல நோயாளி ஒருவர் ஓடோடிச் சென்று எடுத்து குப்பை தொட்டியில் கொண்டு போடுகிறார். அவரைப் பார்த்து பயணிகளும் குப்பையை கீழே போடத் தயங்குவதால் வத்தல குண்டு பஸ் நிலையம் இப்போது சுத்தமாக காணப்படுகிறது.
வத்தலகுண்டு பஸ் நிலையத்தில் குவியும் குப்பைகளை வத்தலகுண்டு பேரூராட்சி துப்பு ரவுத் தொழிலாளர்கள் தினமும் காலையில் மட்டும் அகற்றுவர். மற்ற நேரங்களில் குப்பைகள் குவிந்து காணப்படும்
இந்நிலையில் கடந்த 2 மாதங் களாக வத்தலகுண்டு பஸ் நிலை யம் குப்பை இன்றி சுத்தமாகக் காணப்படுகிறது. இதன் பின்னணி யில் ஒரு மனநோயாளி உள்ளார். காலை முதல் இரவு வரை பேரூராட்சி குப்பை வண்டியுடன் பஸ் நிலைய வளாகத்தில் சுற்றித் திரியும் இந்த மனநோயாளி பயணிகள் வீசும் குப்பைகளை ஓடிச்சென்று எடுத்து குப்பைத் தொட்டியில் கொண்டு போடுகிறார்.
கண்ட இடங்களில் கூச்சமில்லா மல் போடும் குப்பைகளை மன நலம் பாதித்த ஒருவர் எடுத்து அகற்றுவதைப் பார்த்து தற்போது பஸ் நிலைய கடைக்காரர்கள், பயணிகள், குப்பையை திறந்த வெளியில் வீசத் தயங்குகின்றனர். வத்தலகுண்டு பஸ் நிலையம் வரும் பயணிகள், அப்பகுதி மக்கள் ஒரு மன நோயாளியால் மனமாற்றம் அடைந்திருப்பது பார்ப்போரை நெகிழ்ச்சியடைய வைக்கிறது.
இதுகுறித்து பஸ் நிலைய கட் டண கழிப்பிட ஒப்பந்ததாரர் பிச்சை கூறியதாவது:
‘தூய்மை இந்தியா’ திட்டத்துக் காக ஒருமுறை பஸ்நிலையத்தில் சிலர் ஒருநாள் முழுவதும் இருந்து குப்பைகளை ஓடி ஓடி எடுத்தனர். அவர்களைப் பார்த்து மனநிலை பாதித்த இவர் பஸ் நிலையத்தில் ஒரு குப்பையை விடுவதில்லை. மனநோயாளியான இவர் கொடைக்கானலைச் சேர்ந்த வர். ரெங்கராஜன்(40) என்பது இவர் பெயர். கொடைக்கானலில் கோடீஸ்வர குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கு மனைவி, குழந்தை உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் அவரது தம்பி காரில் இவரை அழைத்துச் செல்ல வந்தார். அவருடன் செல்ல மறுத்துவிட்டார்.
தம்பியிடம் விசாரித்தபோது, ஒருநாள் ரெங்கராஜன் அவரது தந்தையை அடித்துவிட்டாராம். மகன் அடித்து விட்டானே என மனமுடைந்தே தந்தை இறந்து விட்டாராம்.
அவரது இறப்புக்கு தான் காரணமாகிவிட்டோமே என்ற கவலையில் இவர் மனநோயாளி யாகிவிட்டார். அங்கிருந்து எப்படியோ நடந்து 2 மாதங்களுக்கு முன் இங்கு வந்தார். டீக்கடை, ஹோட்டலில் யாரிடமும் சென்று பிச்சை கேட்க மாட்டார். நாங்கள், கடைக்காரர்கள், பேரூராட்சி துப்புரவு தொழிலாளர்கள் அவ ருக்கு உணவு வாங்கிக் கொடுப் போம். இன்று அவரால் எங்கள் ஊர் பஸ் நிலையம் சுத்தமாகியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.