

போக்ஸோ சட்டத்தின் கீழ்பதிவு செய்யப்படும் வழக்குகளை துரிதமாக விசாரிக்கும் வகையில்சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று சிறப்பு நீதிமன்றம்தொடங்கப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிட்டி சிவில் நீதிமன்றத்தில், சிறார்களுக்கு எதிரானபோக்ஸோ சட்டத்தின் கீழ் பதியப்படும் பாலியல் வழக்குகளை துரிதமாக விசாரிக்கும் வகையில்சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றத்தை சென்னைஉயர் நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எம்.கோவிந்தராஜ் ஆகியோர் நேற்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
விழாவில் நீதிபதி வினீத் கோத்தாரி பேசும்போது, “சிறார்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளை விசாரிக்க பிரத்யேகமாக நீதிமன்றங்களைநாடு முழுவதும் உருவாக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தற்போது இந்த சிறப்புநீதிமன்றம் உருவாக்கப்பட்டுள்ளது. இதையும் சேர்த்து மொத்தம் 16 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படவுள்ளன. இந்த நீதிமன்றத்தில் வழக்குகளை விரைந்து முடிக்க இருதரப்பு வழக்கறிஞர்களும் தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க கால வரம்பு நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும்” என்றார்.
விழாவில், சென்னை சிட்டி சிவில் நீதிமன்ற முதன்மை நீதிபதி ஆர்.செல்வகுமார், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார், லா அசோசியேஷன் தலைவர் எல்.செங்குட்டுவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.