

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வருமான வரித் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாதச் சம்பளதாரர்கள் தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை பகுதி அதிகார எல்லைக்கு உட்பட்டவர்கள் நுங்கம்பாக்கம் ஆயகார் பவன் வளாகத்திலும், அதேபோல், தாம்பரம் பகுதி அதிகார எல்லைக்கு உட்பட்டவர்கள் தாம்பரம் ஆயகார் சேவை கேந்திராவிலும் தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.