Published : 24 Aug 2015 09:05 AM
Last Updated : 24 Aug 2015 09:05 AM

20 ஆயிரம் ரயில் பெட்டிகளில் ரூ.700 கோடி செலவில் சிசிடிவி கேமரா பொருத்த ரயில்வே திட்டம்

ரயில்களில் பயணிகளின் பாது காப்பை வலுப்படுத்தும் வகையில் நிர்பயா நிதி திட்டத்தின் கீழ் ரூ.700 கோடி செலவில் மொத்தம் 20 ஆயிரம் ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

ரயில்வே துறையில் பயணி களின் சேவையை மேம்படுத் துவதற்கான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் சமீபத்தில் நடந்தது. அப்போது, ரயில் சேவையை மேம்படுத்துதல், புதிய வழித்தடங்கள், மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள் அமைத்தல், ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பை மேம்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விரிவாக பேசப்பட்டது.

அப்போது, ரயில்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது பற்றி முடிவு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்ச கத்தின் நிர்பயா நிதி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதியை இதற்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பெண்கள் பாதுகாப்புக்கான நிர்பயா நிதி திட்டத்துக்கு மொத்தம் ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. இந்த நிதியில் ரூ.700 கோடியை பயன்படுத்தி 20 ஆயிரம் ரயில் பெட்டிகளில் கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மேலும் 100 புதிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வுள்ளன. இது தொடர்பாக தெற்கு ரயில்வேயின் பாதுகாப்பு உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படவுள்ளன. ரயில் நிலையங்களுக்குள் நுழையும் கார்களின் அடிப்பகுதியை சோதனை செய்யும் அதிநவீன ஸ்கேனர் கருவிகள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 3 இடங் களிலும், எழும்பூர் ரயில் நிலை யத்தில் 2 இடங்களிலும் அமைக்கப் படவுள்ளன.

மேலும், சென்ட்ரலில் உள்ள கேமராக்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது, சில கேமராக்கள் செயலிழந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை மாற்றவும், புதிய கேமராக்களை பொருத்தவும் இடங்களை தேர்வு செய்து வருகிறோம். மேலும், 100 கேமராக் களை பொருத்த ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்துள்ளோம். புதிய கேமராக் கள் வந்தவுடன் ஒவ்வொரு நடைமேடைகளிலும் தலா 8 முதல் 10 கேமராக்கள் பொருத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x