

தமிழகத்தில் முன்முயற்சியாக 10 சதவீத மதுவிலக்கை அமல் படுத்த வேண்டுமென்று இந்திய தவ்ஹீத் ஜமா அத் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பின் மாநிலச் செயலாளர் முஹம்மது ஷிப்லி நேற்று வெளி யிட்ட அறிக்கையில் கூறியுள்ள தாவது:
மதுவிலக்கை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த காந்திய வாதி சசிபெருமாள் குடும்பத் தினரை காவல்துறை கைது செய் திருப்பது கடும் கண்டனத்துக் குரியது. மதுவிலக்கை அமல் படுத்தக்கோரி தமிழகத்தில் நீண்ட நாட்களாக பலரும் போராடி வருகின்றனர். தமிழக அரசு கவுரவம் பார்க்காமல் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த முன்வர வேண்டும். அதன் முன்முயற்சியாக 10 சதவீத மதுவிலக்கை உடனடியாக அறிவிக்க வேண்டும்.
தி.க. கோரிக்கை
திராவிடர் கழக தலைமை செயற்குழுக் கூட்டம் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடை பெற்றது. அதில், “மதுவுக்கு அடிமையாகும் மக்களின் எண் ணிக்கை நாளும் வளர்ந்து வருகிறது. இதை உணர்ந்து தமிழக அரசு முழு மதுவிலக்கை கொண்டு வர வேண்டும். கேரளத் தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவது போல் தமிழக அரசும் செயல்படுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.