லலிதா ஜுவல்லரி நகைக் கொள்ளை வழக்கில் முருகனிடம் 1.5 கிலோ நகை பறிமுதல்: திருவாரூர் போலீஸார் மீது சுரேஷ் குற்றச்சாட்டு

திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துவரப்பட்ட முருகன்
திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துவரப்பட்ட முருகன்
Updated on
1 min read

லலிதா ஜுவல்லரி நகைக் கொள்ளை வழக்கில் முருகனிடம் 7 நாட்கள் நடத்தப்பட்ட விசாரணை யின் அடிப்படையில் 1.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சி லலிதா ஜுவல்லரியில் கடந்த அக்.2-ம் தேதி ரூ.13 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது குறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து திருவாரூரைச் சேர்ந்த மணிகண் டன்(34), பிரபல கொள்ளையன் முருகனின் சகோதரி கனகவல்லி (57), மதுரை தெத்தூர் மேட்டுப்பட்டி யைச் சேர்ந்த கணேசன்(35) ஆகி யோரை கைது செய்தனர். இவர்க ளிடம் இருந்து 10.800 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செங்கம் நீதிமன்றத்தில் சரணடைந்த சுரேஷை அக்.14 முதல் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்ததில் 1.499 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

முருகனை பெங்களூரு சிறை யில் இருந்து திருச்சிக்கு அழைத்து வந்து நவ.27 ம் தேதி முதல் விசாரணை நடத்திய கோட்டை குற்றப்பிரிவு போலீஸார் நேற்று முருகனை ஜே.எம்-2 நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தினர். அவரை டிச. 16 வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி திரிவேணி உத்தரவிட்டார். இதையடுத்து முருகன் பெங்க ளூரு சிறைக்கு கொண்டு செல்லப் பட்டார். முருகனிடம் நடத்திய விசார ணையின்போது பல்வேறு இடங் களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சி லலிதா ஜுவல்லரியில் 28.980 கிலோ தங்க, வைர நகைகள் கொள்ளை போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை 25.799 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் 3.181 கிலோ நகைகளை மீட்க வேண்டியுள்ளது.

இந்நிலையில் 2017-ல் திருச்சி கே.கே.நகரில் ஒரு வீட்டில் 40 பவுன் திருடப்பட்ட வழக்கில் சுரேஷை நேற்று ஜே.எம்-2 நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கின் கீழ் சுரேஷை 14 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி திரிவேணி உத்தரவிட்டார்.

பின்னர் அங்கிருந்த செய்தியா ளர்களிடம் சுரேஷ் கூறியபோது, ‘‘போலீஸார் எங்கள் மீது அதிக வழக்குகளை எங்கள் கணக்கில் காட்டுகின்றனர். லலிதா ஜுவல்லரி யில் எவ்வளவு நகைகள் கொள்ளை போனது என அவர்கள் சரியாக சொல்லவில்லை. திருவாரூரில் 5.7 கிலோ நகையை எடுத்த போலீஸார் ஒரு கிலோ நகைகளை எடுத்துக் கொண்டு 4.700 கிலோவை மட்டும் கணக்கு காட்டியுள்ளனர். இதைச் சொன்னால் போலீஸார் எங்களை அடிக்க வருகின்றனர்’’ என் றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in