

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த தாக மேலும் ஒரு மாணவரின் தந்தையை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக இதுவரை 5 மாணவர்கள் 5 பெற்றோர்கள் என 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர், இதில் மாணவர்கள் அனைவருக்கும் உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியது.
பெற்றோருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு வந்த நிலை யில் கடந்த 26-ம் தேதி முதல் அடுத்தடுத்து ஜாமீன் வழங்கப் பட்டது. இதன்படி சரவணன், டேவிஸ், வெங்கடேசன், முகமது சபி ஆகியோருக்கு தேனி நீதித் துறை நடுவர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. தற்போது மாணவி பிரியங்காவின் தாய் மைனாவதி மட்டும் சிறையில் உள்ளார்.
இந்நிலையில், சென்னை கோபாலபுரத்தைச் சேர்ந்த மாணவர் ரிஷிகாந்த் என்பவரும் ஆள் மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாக போலீ ஸார் விசாரணையில் தெரியவந் தது. தங்களை சிபிசிஐடி போலீ ஸார் தேடுவதை அறிந்த ரிஷிகாந் தும், அவரது தந்தை ரவிக்குமா ரும் உயர் நீதிமன்ற மதுரை கிளை யில் முன்ஜாமீன் கோரி மனு தாக் கல் செய்தனர். இதில் ரிஷிகாந் துக்கு மட்டும் முன்ஜாமீன் வழங்கப் பட்டது. இதனைத்தொடர்ந்து மதுரை சிபிசிஐடி போலீஸார், ரவிக் குமாரை நேற்று கைது செய்தனர்.
அவரை தேனி சமதர்மபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலு வலகத்துக்கு அழைத்து வந்து போலீஸார் விசாரித்தனர். நீட் தேர்வு முறைகேட்டில் உதவிய ஏஜென்ட் யார், எவ்வளவு பணம் கைமாறியது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.