

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வெள்ளாற்றில் பேரூராட்சி நிர்வா கம் குப்பைகளை கொட்டியது. இதுதொடர்பாக செயல் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி யில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தொழுதூர் அணைக் கட்டு நிரம்பி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. பல ஆண்டுக ளுக்கு பிறகு வெள்ளாற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. இதனை காண திட்டக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் கூட்டமாக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் திட்டக்குடி பகுதி யில் அள்ளப்படும் குப்பைகளை லாரி மூலமாக பேரூராட்சி நிர்வாகத் தினர் கடந்த 2 நாட்களாக வெள்ளாற் றில் ஓடும் தண்ணீரில் கொட்டி வருகின்றனர். பேரூராட்சி நிர்வா கமே தண்ணீரை மாசுபடுத்துவது குறித்து இப்பகுதியில் உள்ள சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் சுட்டிக் காட்டினர்.
இதுதொடர்பான தகவல்கள் வாட்ஸ் அப்பில் பரவின. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத் துக்கு பலரும் புகார் தெரிவித்த னர். இதையடுத்து திட்டக்குடி பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன், துப்புரவு மேற் பார்வையாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் உத்தரவிட்டார்.