போலி சான்றிதழ் தந்து பணியில் சேர்ந்த காவலர் உட்பட 3 பேர் கைது: ராமநாதபுரத்தில் மேலும் 6 பேரிடம் போலீஸார் தீவிர விசாரணை

போலி சான்றிதழ் தந்து பணியில் சேர்ந்த காவலர் உட்பட 3 பேர் கைது: ராமநாதபுரத்தில் மேலும் 6 பேரிடம் போலீஸார் தீவிர விசாரணை
Updated on
1 min read

ராமநாதபுரத்தில் போலி விளையாட்டு சான்றிதழ் கொடுத்து பணியில் சேர முயற்சித்த 6 பேரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற முறைகேட்டில் ஏற்கெனவே ஈடுபட்டு பணியில் சேர்ந்த ஆயுதப் படை காவலர் மற்றும் அவருக்கு உதவிய 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ரகசிய தகவல்

போலீஸ் பணிக்கான தேர்வில் சிலர் விளையாட்டு இடஒதுக்கீட் டில் போலி சான்றிதழ் வழங்கி யுள்ளதாகவும், கடந்த 2 ஆண்டு களுக்கு முன்பு ஒருவர் போலி சான்றிதழ் கொடுத்து போலீஸ் பணியில் சேர்ந்துள்ளதாகவும், ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி. அலுவலக தொலைபேசி எண் ணுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் எஸ்.பி. வீ.வருண்குமார், தனிப்படைகள் அமைத்து விசாரணை செய்தார்.

கபடி வீரர்

இதில், கமுதி அருகே ஓ.கரிசல் குளத்தைச் சேர்ந்த ராஜீவ்காந்தி (30) என்பவர், தனது நண்பரான அதே ஊரைச் சேர்ந்த மணிராஜன் (23) என்பவருக்கு போலி விளை யாட்டுச் சான்றிதழ் பெற்று தந்த தாக தெரியவந்தது.

விசாரணையில், சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த கபடி பயிற்சியாளர் சீமான் (55) என்பவரிடம் ரூ.50,000 கொடுத்து, தேசிய அளவிலான கபடி போட்டி யில் 18 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மணிராஜன் பங்கேற்றதாக சான்றிதழ் பெற்றதாக ராஜீவ் காந்தி விசாரணையின் போது கூறியுள்ளார்.

இந்த போலிச் சான்றிதழ் மூலம் விளையாட்டு இடஒதுக்கீட்டில் மணிராஜன் இரண்டாம் நிலை காவலராக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்துள்ளார். இவர் தற்போது புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படையில் காவல ராக உள்ளார்.

இதையடுத்து, ராஜீவ் காந்தி, சீமான், காவலர் மணிராஜன் ஆகி யோரை கேணிக்கரை போலீஸார் கைது செய்து, ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.

தீவிர விசாரணை

இதனிடையே, கடந்த மாதம் ராமநாதபுரத்தில் நடந்த சீருடைப் பணியாளர் (இரண்டாம்நிலை காவ லர், தீயணைப்பு வீரர் உள்ளிட்ட பணிகளுக்கான) தேர்வில் போலி விளையாட்டுச் சான்றிதழ் கொடுத்த தாக வந்த புகார் தொடர்பாக, மேலும் 6 பேரிடம் ராமநாதபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறிய தாவது:

போலி விளையாட்டுச் சான்றிதழ் விவகாரத்தில் ஏற்கெனவே ஒரு காவலர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது பணியில் சேர முயற்சித்து காவலர் தேர்வில் போலிச் சான்றிதழ் தந்ததாக சந்தேகிக்கப்படும் 6 பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

அவர்களுக்கு போலிச் சான்றிதழ் தயாரித்து வழங்கிய கும்பலை பிடிக்க முயற்சித்து வருகிறோம். அவர்கள் பிடிபட்டால்தான், இந்த விவகாரத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது பற்றிய முழு விவரம் தெரியவரும்.

இவ்வாறு போலீஸார் கூறி னர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in