ஜிஎஸ்டி செலுத்துவதில் மோசடி: திமுக பெண் எம்எல்ஏ வீட்டில் அதிகாரிகள் திடீர் சோதனை - ஒரே நேரத்தில் 5 இடங்களில் நடந்தது

வரலட்சுமி
வரலட்சுமி
Updated on
1 min read

செங்கல்பட்டு திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனனின் வீடு மற்றும் அலுவலகங்களில் மத்திய சரக்கு மற்றும் சேவை துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

செங்கல்பட்டு தொகுதி திமுக எம்எல்ஏ வரலட்சுமி. இவரது கணவர் மதுசூதனன். இவர்கள் இருவரும் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் 2 நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.

துப்புரவு பணியாளர் முதல் பொறியாளர்கள் வரை பல்வேறு தரப்பினருக்கு இவர்கள் நிறு வனம் மூலம் வேலை வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. இதற் காக 2 நிறுவனங்களிலும் நூற்றுக்கணக்கானவர்கள் பணி புரிகின்றனர்.

வரலட்சுமி, மதுசூதனனின் நிறுவனங்கள் முறையாக ஜிஎஸ்டி செலுத்தவில்லை என்ற புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட் டம் மறைமலைநகரில் உள்ள வரலட்சுமியின் வீடு, அலுவலகங் கள் உட்பட 5 இடங்களில் ஜிஎஸ்டி அதிகாரிகள் நேற்று முன்தினம் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

தொடர்ந்து விசாரணை

மறைமலைநகர் அருகே ஆப்பூர் பகுதியில் உள்ள மதுசூதனின் சகோதரரும், திமுக விவசாய அணி நிர்வாகியுமான ஆப்பூர் சந்தானத்தின் வீட்டிலும் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை நடத்தினர். நேற்றும் விசாரணை தொடர்ந்து நடைபெற்றது.

ஜிஎஸ்டி தாக்கல் செய்வதற்கு போலியான ரசீதுகள் மற்றும் ஆவணங்களை தயாரித்திருப்பது அதிகாரிகள் நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது.

பல லட்சம் ரூபாய் மோசடி

இதன்மூலம் பல லட்சம் ரூபாய் ஜிஎஸ்டி தொகையை மோசடி செய்திருப்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்போது கைப்பற்றப்பட்டுள்ள ஆவணங்களை ஆய்வு செய்த பின்னரே முழுமையான விவரங் கள் தெரியவரும் என்று ஜிஎஸ்டி அதிகாரிகள் தெரிவித்துள்ள னர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in