

சர்வதேச அளவில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டில் தங்கம் விலையில் ஏற்றமும், இறக்கமும் இருந்து வந்தாலும், விலை ஏற்றம் அதிக மாக இருந்து வருகிறது.
தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பாக இருப்பதால், முத லீட்டாளர்களும் தங்கத்திலேயே தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றனர். இதனால், தங்கம் விலை மீண்டும் ஒரு பவுன் ரூ.29 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
சென்னையில் தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.29,184-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.3,648-க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.3 ,628-க்கு விற்பனை ஆனது