இன்று 3-ம் ஆண்டு நினைவு தினம்: ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி

இன்று 3-ம் ஆண்டு நினைவு தினம்: ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி
Updated on
1 min read

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் இன்று அஞ்சலி செலுத்துகின்றனர்.

அதிமுக பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிச.5-ம் தேதி உடல்நலக்குறைவால் மறைந்தார். அவரது 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அதிமுக சார்பில் இன்று அமைதி ஊர்வலம் நடக்கிறது. நிர்வாகிகள் பங்கேற்புசென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான பழனிசாமி ஆகியோர் தலைமையில் அமைதி ஊர்வலம் புறப்பட்டு மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தை அடைகிறது.

அமைதி ஊர்வலத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிமுக நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர். அதைத் தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி ஏற்கின்றனர்.

அமமுக ஊர்வலம்ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி அமமுக சார்பிலும் அமைதி ஊர்வலம் நடத்தப்படுகிறது. டிடிவி தினகரன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் ஊர்வலமாக சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.

இதுதவிர தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு அதிமுகவினரும் அமமுகவினரும் மலர்அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in