

மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டபோது தாக்கல் செய்த வேட்புமனுவில் அசையா சொத்து விவரங்களை மறைத்தது தொடர்பாக மதுரை ஆட்சியர் தொடர்ந்த தனி நபர் வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தாக்கல் செய்த மனு, தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி 2009 மக்களவைத் தேர்தலில் மதுரை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்த தேர்தலில் போட்டியிட மு.க.அழகிரி தேர்தல் அதிகாரி யிடம் தாக்கல் செய்த வேட்பு மனுவில் சொத்து விவரங்களை முழுமையாக அளிக்காமல் மறைத்ததாக 2014-ல் அப்போதைய மதுரை ஆட்சியர் சுப்பிரமணியன் மதுரை முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் இந்திய தண்ட னைச் சட்டம் 177 மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 125ஏ பிரி வின் கீழ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மு.க.அழகிரி உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டபோது தாக் கல் செய்த வேட்புமனுவில் அசையா சொத்து விவரத்தை மறைத்ததாக மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதே விவகாரம் தொடர்பாக எஸ்.ஜெகநாதன் என்பவர் 25.5.2013-ல் திருவாரூர் ஆட்சியரிடம் புகார் அளித்தார். அந்தப் புகார் மீது ஆட்சியரின் உத்தரவின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு 29.10.2013-ல் தேர்தல் அலுவலரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், அதே விவகாரம் தொடர்பாக 2014-ல் தனிநபர் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அரசி யல் உள்நோக்கத்துடன் என் மீது தனிநபர் வழக்குத் தொடரப் பட்டுள்ளது.
எனவே, வழக்கை ரத்து செய்ய வேண்டும். அதுவரை கீழமை நீதிமன்றத்தின் விசார ணைக்குத் தடை விதிக்க வேண் டும். விசாரணையின்போது நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண் டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டி ருந்தது.
இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. தேர்தல் வழக்காக இருப்ப தால் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.