

தமிழகம் முழுவதும் 50 முழு இயந்திரம், 300 பகுதி இயந்தி ரம் மற்றும் 2,000 சிறு தீப்பெட்டி தொழிற்சாலைகள் (பேக்கேஜிங் யூனிட்) இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் சுமார் 4 லட்சம் பேர் வேலை பெறுகின்றனர்.
தீபாவளி பண்டிகை விடு முறைக்கு பின்னர் தீப்பெட்டி தொழிற்சாலைகள் நவ.5-ம் தேதி திறக்கப்பட்டன. அதன்பிறகு பெய்துவரும் மழை காரணமாக, கேரளாவில் இருந்து தீக்குச்சிகள் தயாரிப்புக்கான மரத்தடிகள் வரத்து நின்று விட்டது. தீக்குச்சி களை காய வைக்க முடியவில்லை.
பெண் தொழிலாளர்கள் விவ சாயப் பணிகளுக்கு சென்றுவிட்ட தால் தொழிற்சாலைகளில் 3 நேர வேலை என்பது ஒரு நேரமாகி விட்டது. பல ஆலைகள் முற்றிலு மாக மூடப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக, தேசிய சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கச் செயலாளர் வி.எஸ்.சேது ரத்தினம் கூறியதாவது: மூலப் பொருட்களின் விலையேற்றம், மின் கட்டண உயர்வு, டீஸல் விலை உயர்வு காரணமாக லாரி வாடகை உயர்வு போன்றவற்றால் உற்பத்தி யாளர்கள் தவிக்கின்றனர்.
கடந்த ஒரு மாதமாக மழை யால் ஆலைகள் தொடர்ந்து இயங்கவில்லை. வடமாநிலங் களில் இருந்து பெறப்பட்ட ஆர்டர் களுக்கு தக்கவாறு பண்டல்கள் அனுப்ப முடியாத நிலை ஏற்பட் டுள்ளது. ரூ.300 கோடி மதிப்பிலான தீப்பெட்டி உற்பத்தி பாதித்துள்ளது. தீப்பெட்டி தொழிலை நம்பி வாழும் லட்சக்கணக்கான தொழி லாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதை சார்ந்துள்ள குச்சி, பிரின் டிங் உள்ளிட்ட தொழில்களும் முடங்கி உள்ளன, என்றார் அவர்.