Published : 04 Dec 2019 07:53 AM
Last Updated : 04 Dec 2019 07:53 AM

தமிழகத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள  2,973 ஏரிகள் முழுமையாக நிரம்பின: அதிகபட்சமாக நெல்லையில் 675 ஏரிகள் நிரம்பின 

தமிழகத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 14,098 ஏரிகளில் இதுவரை 2,973 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 1,103 ஏரிகள் 91 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை நிரம்பியிருக்கின்றன. அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 675 ஏரிகள் நிரம்பியுள்ளன.

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. பல இடங்களில் கனமழை பெய் துள்ளது. அணைகள், ஏரிகள், குளங்கள், ஊரணிகள் உள் ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வரு கின்றன. சில இடங்களில் ஏரி களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், 100 ஏக்கருக்கு மேல் பாசனப் பரப்பு கொண்ட பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் நேற்றுவரை (டிச.3) 2,973 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் நீலகிரி மாவட்டம் தவிர, மீதமுள்ள 31 மாவட்டங்களில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் 14,098 ஏரிகள் உள்ளன. இதில் 2,973 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. 1,103 ஏரிகள் 91 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை நிரம்பியுள்ளன.

1,024 ஏரிகள் 81 சதவீதம் முதல் 90 சதவீதமும், 998 ஏரிகள் 71 சதவீதம் முதல் 80 சதவீதமும், 1,868 ஏரிகள் 51 சதவீதம் முதல் 70 சதவீதமும், 2,639 ஏரிகள் 26 சதவீதம் முதல் 50 சதவீதமும், 3,066 ஏரிகள் 1 முதல் 25 சதவீதமும் நிரம்பியுள்ளன. 427 ஏரிகள் வறண்டு காணப்படுகின்றன.

குமரியில் அதிகபட்சம்

கன்னியாகுமரி மாவட்டத் தில்தான் அதிகபட்சமாக 2,040 ஏரிகள் உள்ளன. சிவகங் கையில் 1,438 ஏரிகளும், மதுரை யில் 1,339 ஏரிகளும், திரு நெல்வேலியில் 1,324 ஏரி களும் இருக்கின்றன. மற்ற மாவட்டங்களில் நூற்றுக்கணக் கான ஏரிகள்தான் உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் ஏரிகள் இல்லை. குறைந்தபட்சமாக சென்னை மாவட்டத்தில் உள்ள 2 ஏரிகளில் மிகக்குறைந்த அளவாக 25 சதவீதத்துக்கும் குறைவாக நீர் இருப்பு உள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x