Published : 04 Dec 2019 07:11 AM
Last Updated : 04 Dec 2019 07:11 AM

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை, நெல்லைக்கு சுவிதா சிறப்பு ரயில்

பொங்கல் பண்டிகையை முன் னிட்டு, தாம்பரத்தில் இருந்து கோவை, திருநெல்வேலிக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப் படுகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தாம்பரம் - கோயம்புத்தூர் சுவிதா சிறப்பு ரயில் (வண்டி எண்.82639) வரும் ஜன.14-ம் தேதி மாலை 6 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 6.40 மணிக்கு கோவை சென்றடை யும். இதேபோல், தாம்பரம் - திரு நெல்வேலி சுவிதா சிறப்பு ரயில் (வண்டி எண்.82625) ஜன.10-ம் தேதி தாம்பரத்தில் இருந்து இரவு 7.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 10.30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

மேலும், தாம்பரம் - திருநெல்வேலி இடையே சுவிதா சிறப்பு ரயில் (வண்டி எண்.82623) வரும் டிச.23-ம் தேதி, ஜன.13-ம் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மாலை 4.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 4 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (4-ம் தேதி) காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.

மின்சார ரயில்கள் ரத்து

எழும்பூர் யார்டில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், சில மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன்படி, சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே அதிகாலை 4.15 மணி மற்றும் தாம்பரம் - கடற்கரை இடையே அதிகாலை 3.55, 4.15, 4.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் நாளை (5-ம் தேதி) முற்றி லுமாக ரத்து செய்யப்படுகின்றன.

இதேபோல், சென்னை கடற் கரை - செங்கல்பட்டு இடையே அதி காலை 3.55, 4.35 மணிக்கு இயக் கப்படும் மின்சார ரயில் நாளை சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x