

தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்ததால் சர்வதேச சந்தை யில் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. 2 மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு பவுன் தங்கம் ரூ.30 ஆயிரத்தை கடந்து உச்சத்தை தொட்டது.
இதையடுத்து, தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதனால், உள்ளூரி லும் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவுகிறது.
நேற்று சென்னையில் 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.11 அதிகரித்து ரூ.3,628-க்கும், பவுனுக்கு ரூ.88 உயர்ந்து 29,024-க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் சென்னையில் தங்கம் கிராம் ரூ.3,617-க்கும், பவுன் ரூ.28,936-க்கும் விற்பனை யானது.