

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் பிற்பகல் முதல் மழை குறைந்ததால் தாமிரபரணி யில் வெள்ளம் தணிந்து வருகிறது. முகாம்களில் தங்கவைக்கப்பட்டி ருந்தவர்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பினர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பைவிட அதிகமாக பெய்துள்ளது. கடந்த 29, 30-ம் தேதி களில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த பலத்த மழை யால் அணைகளுக்கு நீர்வரத்து அதி கரித்தது. ஏற்கெனவே நிரம்பி யிருந்த பாபநாசம் அணையிலி ருந்து பெருமளவு தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த 30-ம் தேதி அதிகாலையில் அணையிலிருந்து விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
மழை குறைந்தது
இதனிடையே நேற்றுமுன்தினம் பிற்பகல் தொடங்கி மாவட்டத்தில் அணைப்பகுதிகளிலும், பிறஇடங் களிலும் மழை குறைந்ததையடுத்து பாபநாசம் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால் அணையிலி ருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டதால் தாமிரபரணியில் வெள்ளம் தணிந்தது.
திருநெல்வேலியில் தாமிரபரணி வெள்ளப்பெருக்கில் மூழ்கியிருந்த தைப்பூச மண்டபம் நேற்று வெளியே தெரிந்தது. ஆற்றங்கரையோர பகுதிகளில் உள்ள வீடுகளை காலி செய்து முகாம்களில் தங்கியிருந்தவர்கள் நேற்று தங்களது வீடுகளுக்கு நேற்று திரும்பினர். அதேநேரத்தில் பலஇடங்களில் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீர் வடியவில்லை.
அணைகள் நிலவரம்
பாபநாசம் அணைக்கு நேற்று காலையில் விநாடிக்கு 3,750 கனஅடி தண்ணீர் வந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 4,057 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. நீர்மட்டம் 141.65 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 2,265 கனஅடி தண்ணீர் வரும் நிலையில் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 94.80 அடியாக இருந்தது.
நேற்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்திலுள்ள அணைப்பகுதிகள், பிறஇடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):
அம்பாசமுத்திரம்- 5, சேரன்மகாதேவி- 1.60, நாங்குநேரி- 2.50, பாளையங்கோட்டை- 2, பாபநாசம்- 5, ராதாபுரம்- 2.20, திருநெல்வேலி- 2.50. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி பாபநாசத்தில் 7 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. மாவட்டத்தில் பிறஇடங்களில் மழை பெய்யவில்லை.