Published : 03 Dec 2019 09:54 AM
Last Updated : 03 Dec 2019 09:54 AM

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழையால் 306 ஏரிகள் நிரம்பியுள்ளன

செங்கல்பட்டு/ காஞ்சிபுரம்/ திருவள்ளூர்

தமிழகத்தில் தற்போது பெய்து வரும் கன மழையால், காஞ்சி புரம், செங்கல்பட்டு மற்றும் திரு வள்ளூர் மாவட்டங்களில் உள்ள ஏரிகளில் 306 ஏரிகள் முழு கொள் ளளவை எட்டியுள்ளன. பெரும் பாலான ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கீழ் 528 ஏரிகள் உள்ளன. இந்த ஏரி களில், திருப்போரூர் வட்டம் - தையூர் பெரிய ஏரி, திருக்கழுக் குன்றம் வட்டம் - புதுப்பட்டினம் ஏரி, கொடங்கண் ஏரி, நடுவக்கரை, லட்டூர் ஏரி, முடிச்சூர் உட்பட 65 ஏரிகள் முழுமையாக நிரம்பி, கலங்கல் வழியாக உபரிநீர் வெளியேறி வருகிறது.

அதுமட்டுமல்லாமல், 477 மில் லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செங்கல்பட்டு கொள வாய் ஏரி 80 சதவீதம் நிரம்பி உள்ளது. மாவட்டத்தில் 131 ஏரி களில் 75 சதவீதம், 196 ஏரிகளில் 50 சதவீதம், 90 ஏரிகளில் 25 சதவீதம் தண்ணீர் நிரம்பியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின்கீழ் 576 ஏரிகள் உள்ளன. இந்த ஏரி களுக்கு தற்போது மழைநீர் அதிக ளவில் வந்து கொண்டிருக்கிறது. தற்போது இங்கு 153 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

அதுமட்டுமல்லாமல் 103 ஏரி களில் 75 சதவீதத்துக்கு அதிகமாக வும், 149 ஏரிகளில் 50 சதவீதத் துக்கு அதிகமாகவும், 171 ஏரி களில் 50 சதவீதத்துக்கு குறை வாகவும் நீர் இருப்பு உள்ளது.

காஞ்சி 88 ஏரிகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கட் டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் மணிமங்கலம், பிள்ளைப் பாக்கம் உள்ளிட்ட 88 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. இதில், படப்பை அருகே 1,800 ஏக்கர் பரப்பளவு கொண்ட மணிமங்கலம் ஏரி தனது முழு கொள்ளளவான 225 மில்லியன் கன அடி தண்ணீருடன் நிரம்பி யுள்ளது. இதனால், கடந்த 3 நாட்களாக கலங்கல் வழியாக உபரிநீர் வெளியேறி வருகிறது.

மேலும், 156 ஏரிகளில் 75 சதவீதத்துக்கு மேலாகவும், 53 ஏரிகளில் 50 சதவீதத்துக்கு மேலாகவும், 80 ஏரிகளில் 25 சதவீதத்துக்கு மேலாகவும் நீர் இருப்பு உள்ளது. இதில், 23.30 அடி உயரம் கொண்ட மதுராந்த கம் ஏரியில் 17 அடி உயரத் துக்கும், 18 அடி உயரமுள்ள தென்னேரியில் 15 அடி உயரத் துக்கும், 30 அடி உயரம் கொண்ட வெம்பாக்கம் ஏரிக்கு 16.60 அடி உயரத்துக்கும் நீர் இருப் புள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x