

குண்ணப்பட்டு அடுத்த பஞ்சந் திருத்தி கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களின் குடிசை வீடுகள் ஒவ்வொரு மழைக் காலத்தின்போதும் தண்ணீரில் மிதக்கும் நிலை உள்ளதால் நிரந்தர தீர்வுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திரூப்போரூர் ஒன்றியம் குண் ணப்பட்டு ஊராட்சியின் பஞ்சந் திருத்தி கிராமத்தில் பல ஆண்டு களாக ஜீவநகர், ஜெகதீசன் நகர் ஆகிய பகுதிகளில் பழங்குடியின மக்கள் 150-க்கும் மேற்பட்ட வீடுகளில் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களின் வசிப்பிட முகவரியில், அரசு வழங்கும் அனைத்து விதமான அடையாள அட்டைகள் மற்றும் சான்றுகள் வைத்துள்ளனர். எனினும், இவர்களின் குடிசைகள் அமைந்துள்ள நிலங்கள் களம் புறம்போக்கு என்பதால், அரசு நிதி உதவியில் குடியிருப்புகளை அமைத்துத் தரமுடியாத நிலை உள்ளது.
இதனால், மழைக்காலங்களில் இவர்களின் குடிசைகளை மழைநீர் சூழ்ந்துவிடுகிறது. அதிகாரிகளும் மீட்பு நடவடிக்கை எனக்கூறி அருகில் உள்ள பள்ளிக் கட்டிடங் களில் தங்கவைத்து உணவு போன்ற நிவாரண உதவிகளை வழங்குகின்றனர். பின்னர், மழைநீர் வடிந்ததும் குடிசைகளுக்கு திரும்ப அனுப்புகின்றனர். கடந்த 4 நாட்களாக பெய்துவரும் மழை யிலும் மேற்கண்ட பகுதி குடிசை களை மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் வீடுகளில் இருந்து வெளி யேற்றப்பட்டு, அரசுப் பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஒவ் வொரு மழையின்போதும் பஞ்சந் திருத்தி கிராமத்தில் தற்காலிக நடவடடிக்கை மட்டுமே எடுக்கப் பட்டு வருகிறது.
இப்பகுதி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வெகு தொலைவில் இருப்பதால் அதிகாரிகளின் பார்வை அவ்வள வாக படவில்லை. தற்போது, செங்கல்பட்டு மாவட்டம் உதய மாகியுள்ளது. செங்கல்பட்டு ஆட்சியரகத்தில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள பஞ்சந்திருத்தி கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியை புதிய ஆட்சியர் நேரில் பார்வையிட்டு, நிரந்தர தீர்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு பழங் குடியின மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெகதீசன் கூறும்போது, “பஞ்சந்திருத்தி கிராமத்தில் குடிசை வீடுகளில் வசிக்கும் பழங்குடியின மக்க ளுக்கு பட்டா வழங்கி, அரசு திட்டத்தில் குடியிருப்பு அமைத்துத் தரவேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக மனு அளித்து வருகிறோம். ஆனால், நிலத்தின் தன்மையை காரணமாக கூறி நடவடிக்கைகள் எடுக்கப்பட வில்லை. அதனால், பழங்குடியின மக்களுக்கு புதிய மாவட்டத்தின் ஆட்சியராவது குடியிருப்புகள் அமைக்க நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும்” என்றனர்.
திருப்போரூர் வருவாய்த் துறை அதிகாரிகள் கூறும்போது, “பழங்குடியின மக்களுக்கு மாற்று இடம் வழங்குவதற்காக ஆலோ சித்து வருகிறோம். இது தொடர் பாக, அப்பகுதி மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை மேற் கொள்ள மாவட்ட ஆட்சியர் அறி வுறுத்தியுள்ளார். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன” என்றனர்.