

கோவை அடுத்த மேட்டுப்பாளை யத்தில் பெரிய சுற்றுச்சுவர் இடிந்து வீடுகள் மேல் விழுந்தது. அதில் 17 பேர் இறந்தனர். இந்த விபத்து தொடர்பாக, சுற்றுச்சுவர் விழுந்த வீட்டின் உரிமையாளரான
ஆட்சியர் வாக்குறுதி
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி கூறும்போது, "விபத்துக்கு காரணமான வீட்டின் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விபத்து ஏற்படுத்தக் கூடிய வகையில் உள்ள சுற்றுச்சுவர் முழுமையாக இடிக்கப்படும். மழை காரணமாக தொடர்ந்து பாதிப்புகள் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு அறிவித்துள்ள இழப்பீடு வழங்கப்படும்" என்றார்.
சாலை மறியல்
இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை மற்றும் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.
"உயிரிழந்தவர்கள் குடும்பங் களுக்கு தலா ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு, அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளரை உடனடியாக கைது செய்ய வேண்டும், சேதம டைந்த நிலையில் உள்ள வீடுகளுக் குப் பதிலாக புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டங்கள் நடைபெற் றன. மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தால், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, 100-க்கும் மேற்பட்டோரை போலீ ஸார் அங்கிருந்து அப்புறப்படுத் தினர்.
போலீஸ் தடியடி
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் 15 டாக்டர்கள், 10 ஊழியர்கள் பிரேதப் பரிசோதனையில் ஈடுபட்டனர். பிணவறை அருகில் கூடியிருந்த பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த வர்கள் மற்றும் இறந்தவர்களின் உறவினர்கள் சிலர், தங்களது கோரிக்கைகளை ஏற்காவிட்டால், சடலங்களைப் பெற்றுச் செல்ல மாட்டோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போலீஸார் மற்றும் போராட்டக்காரர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. காவல் துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் தலைமையிலான போலீ ஸார் லேசான தடியடி நடத்தி, அங்கிருந்தவர்களை கலைந்து போகச் செய்தனர்.