

கொடைக்கானல்
கொடைக்கானலுக்கு வந்துள்ள இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் கடும் குளிர் நிலவும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து வட்டக்கானல் பகுதியில் தங்குவர். இங்கு வரும் இஸ்ரேலிய நாட்டு யூதர்கள் மொத்தமாகக்கூடி, சபாத் எனும் சிறப்பு வழிபாட்டில் ஈடுபடு வர்.
கடந்த 2016-ல் ஐஎஸ்ஐஎஸ் தீவிர வாதிகள் கொடைக்கானல் வட்டக் கானல் பகுதியில் கூட்டு வழிபாடு நடத்தும் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தேசிய புலானாய்வு அமைப்பின் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து வட்டக்கானல் நுழைவுப் பகுதியில் நிரந்தரமாக சோதனைச்சாவடி அமைக்கப்பட் டது. இந்நிலையில், தற்போது இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வந்து வட்டக்கானல் பகுதியில் தங்கி உள்ளனர். இவர்கள் வெள்ளிக் கிழமை இரவு கூட்டு வழிபாடு நடத்த உள்ளனர்.
இதனால் வட்டக்கானல் செக்போஸ்ட் பகுதியில் டி.எஸ்.பி. ஆத்மநாதன் தலைமையில் பாது காப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வாகனங்கள் அனைத்தும் முழு சோதனைக்கு உள்ளாக்கப்படுகின் றன. வெளிநாட்டினரின் பாஸ் போர்ட் எண்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்படுகின்றன.