

அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் மாவட்டங்களில் புதி தாக அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
தமிழக சுகாதாரத் துறையில் 2,721 டாக்டர்கள், 1,782 கிராம சுகாதார செவிலியர்கள், 96 மருத் துவ அலுவலர்கள், 524 ஆய்வக நுட்புநர்கள், 77 இயன்முறை சிகிச்சையாளர்கள், 24 இளநிலை உதவியாளர்கள் என மொத்தம் 5,224 பேருக்கு பணிநியமன ஆணை கள் வழங்கும் விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது.
விழாவில் முதல்வர் பழனிசாமி கலந்துகொண்டு, பணிநியமன ஆணைகளை வழங்கினார். தமிழ்நாடு இணையவழி கண்ணி யல் வலைதளம் மற்றும் 32 மாவட் டங்களில் தொலைதூர கண் பரிசோதனை மையங்கள் ஆகிய வற்றையும் தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:
சுகாதாரத் துறையில் நாட்டி லேயே முதன்மை மற்றும் முன்மாதிரி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இந்த ஆண்டில் மட்டும் 9 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அர சின் ஒப்புதலை பெற்றுள்ளது. இது தமிழக வரலாற்றில் ஒரு மைல்கல் சாதனையாகும். இதனால், வரும் ஆண்டுகளில் மருத்துவப் படிப்பு இடங்கள் மேலும் 900 அதிகரிக் கும். 9 மருத்துவக் கல்லூரிகளி லும் பல்வேறு வகைகளில் சுமார் 8,000 பணியிடங்கள் தோற்றுவிக்கப் பட்டு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்பட்டுள்ளது.
அரியலூர், கடலூர், கள்ளக் குறிச்சி, காஞ்சிபுரம் மாவட்டங் களில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
கிராமப்புற மக்களின் மருத் துவ வசதிக்காக தமிழக அரசு ஏற்படுத்திய நடமாடும் மருத்து வமனை திட்டம் சிறப்பாக செயல் பட்டு வருகிறது. தமிழகத்தில் 32 ஆரம்ப சுகாதார நிலையங்களில் நவீன இணையவழி கண் பரி சோதனை மையங்கள் அனைத்து மருத்துவக் கருவிகளுடன் மாவட் டத்துக்கு ஒன்று வீதம் அமைக் கப்பட்டுள்ளது. இந்த வசதி ரூ.5.67 கோடி செலவில் ஏற்படுத் தப்பட்டுள்ளது.
உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையிலும் நாட்டிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதில் மிகச் சிறப்பாக செயல்பட்டதற்காக, மத்திய அரசின் தேசிய விருதுகளை தமிழக அரசு கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து பெற்று சாதனை படைத்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் காலி பணியிடங்களை அவ்வப்போது நிரப்ப வேண்டும் என்பதற்காக தனியாக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் கடந்த 2012-ல் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த வாரியத்தால் இதுவரை 12,823 மருத்துவர்கள், 10,085 செவிலியர்கள் உட்பட 27,436 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணிநியமனம் பெற்றுள்ளனர்.
தற்போது ஒரே நேரத்தில் 5,224 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்படுகிறது. அரசு மருத்துவ மனைகளுக்கு வரும் ஏழை நோயா ளிகளின் உயிரை காக்கும் புனித மான சேவையை செய்ய நீங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள் என்பதை உணர்ந்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு முதல்வர் கூறினார்.
விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசும்போது, “உடலுக்கு நோய் வந்துவிட்டால், நிம்மதி கரைந்துபோகும். மகிழ்ச்சி மறைந்து போகும். அதனால்தான் நம் முன்னோர்கள் ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்றார்கள். இந்திய வரலாற்றில் குப்தர்களின் காலம் பொற்காலம் என்று வரலாற்று அறிஞர்கள் கூறுவார்கள். அதுபோல, தற் போதைய ஆட்சிக் காலம், தமிழக மக்களின் பொற்காலம் என்று தற்கால தலைமுறையும், வருங் கால சந்ததியினரும் வாழ்த்து வார்கள். தனியார் மருத்துவ மனைகளைவிட, அரசு மருத் துவமனைகளையே நம்பி, விரும்பி மக்கள் அதிக எண்ணிக்கையில் வரும் அளவுக்கு, அரசு மருத்து வமனைகளில் உங்கள் சேவை அமைய வேண்டும். அதன்மூலம் நம் மாநிலத்துக்கு பெருமையை பெற்றுத்தர வேண்டும்” என்றார்.
விழாவில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் க.சண்முகம், சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.