

தொகுதி மறுவரையறை செய்யப் படவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுவது கேலிக் கூத்து. உண்மைக்கு மாறான அவரது பேச்சு ஒருபோதும் எடு படாது என்று அமைச்சர் டி.ஜெயக் குமார் தெரிவித்தார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று கூறியதாவது:
தமிழகத்தில் தொகுதி மறுவரை யறையை மாநில தேர்தல் ஆணை யம் திருப்திகரமாக செய்துள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெரி வித்துள்ளது. மாநில தேர்தல் ஆணையம் தன்னாட்சி பெற்ற ஓர் அமைப்பு. அது தன் கடமையை சரிவர செய்து வருகிறது. எனவே, உள்ளாட்சி தேர்தல் ஜனநாயக முறைப்படி, நேர்மையாக, நியாயமாக நடக்கும்.
மக்கள் எங்களுடன் இருப்பதால் இத்தேர்தலை எதிர்கொள்ள நாங் கள் தயாராக உள்ளோம். எங் களுக்கு எந்த அச்சமும் இல்லை.
இடஒதுக்கீடு அடிப்படையில் மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடி யினருக்கு வார்டுகள் பிரிக்கப் பட்டுள்ளன. இந்த விவரங் கள் தேர்தல் ஆணைய இணைய தளத்தில் இடம்பெற்றுள்ளன. யார் வேண்டுமானாலும் அவற்றை பார்த்துக் கொள்ளலாம்.
இதை எல்லாம் மூடி மறைத்து விட்டு, தொகுதி மறுவரையறை செய்யப்படவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுவது கேலிக்கூத்து. வெறும் வார்த்தை களால் எங்கள் மீது குற்றம் சுமத்தி விடலாம் என்று நினைக்கிறார். உண்மைக்கு மாறான அவரது பேச்சு ஒருபோதும் எடுபடாது.
கடந்த 2006-ல் திமுக ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்தபோது வன்முறை கட்ட விழ்த்துவிடப்பட்டது. அதிமுக வினர் தாக்கப்பட்டனர். அண்ணா சிலை முன்பு போராட்டம் நடத்தி நீதி கேட்டோம். அதுதொடர்பான வழக்கில், 99 வார்டுகளில் மறு தேர்தல் நடத்த சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது. ஆனால், தற்போது தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. எனவே, எந்த குற்றச்சாட்டுக்கும் இடமின்றி தேர்தல் நடத்தப்படும். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.