ரூ.35 கோடிக்கு போலி ரசீதுகள் கொடுத்து ரூ.6 கோடி ஜிஎஸ்டி மோசடி செய்த தொழில் அதிபர் கைது 

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னையில் அஸ்கார் என்டர் பிரைசஸ் என்ற பெயரில் 8 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனம் சார்பில் ஜிஎஸ்டிக்காக தாக்கல் செய்யப்பட்ட ரசீதுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் போலியான ரசீதுகள் தாக்கல் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு அஸ்கார் என்டர்பிரைசஸ் நிறுவனங்களில் ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரித் துறையினர் திடீர் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினர்.

ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரி சென்னை தெற்கு ஆணையர் கே.எம்.ரவிச்சந்திரன் உத்தரவின்பேரில், உதவி ஆணை யர் ராம்குமார் கோபால், கண் காணிப்பாளர்கள் கே.ரங்கராஜ், டி.செந்தில்குமார், எல்.கோபால கிருஷ்ணன் மற்றும் ஆய்வாளர் கள் சுரேஷ்குமார், எஸ்.ஞானி ஆகியோர் அஸ்கார் நிறுவன ஆவணங்களை ஆய்வு செய்த தில், சுமார் ரூ.35 கோடியே 17 லட் சத்துக்கு போலி ரசீதுகள் தாக்கல் செய்திருப்பது தெரியவந்தது.

இந்த போலி ரசீதுகள் மூலம் ரூ.6 கோடியே 34 லட்சம் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததாக அஸ்கர் எண்டர்பிரைசஸ் நிறுவனங் களின் உரிமையாளரான கே.இம் ரான்கான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் இம்ரான் கானை ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரித் துறையினர் நேற்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இம்ரான் கானை சென்னை எழும்பூர் 2-வது பொருளாதார குற்றவியல் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். இம் ரான்கானை வரும் 12-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறை யில் அடைக்க நீதிபதி உத்தர விட்டார். மேலும் இதுகுறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருவதாக ஜிஎஸ்டி மற்றும் கலால்வரித் துறை சென்னை தெற்கு உதவி ஆணையர் ராம் குமார் கோபால் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in