

கொடைக்கானலில் தொடர்மழை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைந்துவிட்டது.
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பகலில் சூரியனையே காண முடியவில்லை. அந்த அளவுக்கு மேகக்கூட்டங்கள் திரண்டு காணப்படுகின்றன.
வாரவிடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இந்நிலையில், கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் குறைந்த எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகளே கொடைக்கானலுக்கு வந்துள்ளனர்.
பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் பலர் குடையைப் பிடித்துக் கொண்டும், மழையில் நனைந்துகொண்டும் வலம் வந்தனர். அதே நேரம், ஏரியில் படகு சவாரி செய்வதை பலர் தவிர்த்தனர்.
கொடைக்கானல் மலைப் பகுதி களில் பெய்து வரும் மழையால், மலையடிவாரத்தில் பழநி அருகே உள்ள பாலாறு பொருந்தலாறு அணை, ஒட்டன் சத்திரம் அருகே உள்ள பரப்பலாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் தொடங்கி நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி, திண்டுக்கல் மாவட் டத்தில் மொத்தம் 179 மி.மீ. மழை பெய்தது.
அதிகபட்சமாக, வேடசந் தூரில் 25 மி.மீ. மழை பதி வானது. கொடைக்கானலில் குறைந்த பட்சமாக வெப்பநிலை 10 டிகிரி செல்சியசாகவும், திண்டுக் கல்லில் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியசாகவும் இருந்தது.பிரையண்ட் பூங்காவை பார்வையிட்ட குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகள்.