அமைச்சர்களின் காமெடியை பார்த்து வடிவேலு நடிப்பதை நிறுத்தி விட்டார்: தேவகோட்டையில் டிடிவி தினகரன் கிண்டல்

அமைச்சர்களின் காமெடியை பார்த்து வடிவேலு நடிப்பதை நிறுத்தி விட்டார்: தேவகோட்டையில் டிடிவி தினகரன் கிண்டல்
Updated on
1 min read

‘அனைத்து அமைச்சர்களின் காமெடியைப் பார்த்துதான், நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிப்பதையே விட்டு விட்டார்,’ என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம், தேவகோ ட்டையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

உள்ளாட்சித் தேர்தல் நட க்க வேண்டும் என்பதுதான் அனை வரது எதிர்பார்ப்பு. உள்ளாட்சி அமைப்புகளில் மறுவரையறை முறையாக இல்லாததால் தான், எதிர்க்கட்சிகள் நீதிமன்றம் சென்று ள்ளன. இதைத் தவிர, தேர்தலை நிறுத்தும் எண்ணம் இல்லை. இதற்காக, நான் திமுகவை ஆதரித்துப் பேசுவதாக நினைக்க வேண்டாம். உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் காலம் தாழ்த்து வதுதான் ஆட்சியாளர்களின் நோக்கம். தினகரனுக்கு பயந் து, விலைபோன ஒருவரை (புகழேந்தி) வைத்து பேட்டி கொடுக்க வைத்துள்ளனர். அவர் அமமுகவை பதிவு செய்யத் தடை கேட்டு நீதிமன்றம் சென்றுள்ளார். அவருக்கு நீதிமன்றம் குட்டு தான் வைக்கும். விபத்தில் வந்தவர்கள் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டு, வெற்றிடத்தை நிரப்பி விட்டோம் எனக் கூறிக் கொள்கின்றனர்.

அமைச்சர்களின் காமெடியை பார்த்து நகைச்சுவை நடிகர் வடிவேலு, தான் நடிப்பதையே விட்டுவிட்டார். அமைச்சர்களின் காமெடியை பற்றிக் கூறினால் என் மீது வழக்குத் தொடுக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in