Published : 01 Dec 2019 09:42 AM
Last Updated : 01 Dec 2019 09:42 AM

பழநி அருகே கஞ்சா விற்பனை செய்ததாக உடுமலை கவுசல்யாவின் தாய், பாட்டி கைது

உடுமலைப்பேட்டையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட சங்கர் மனைவி கவுசல்யாவின் தாய் மற்றும் பாட்டி ஆகியோரை கஞ்சா வழக்கில் பழநி போலீஸார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே குப்பம்பாளையம் பகுதி யில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத் தது. பழநி தாலுகா போலீஸார் குப்பம்பாளையம் சென்று விசா ரணை நடத்தியதில் கஞ்சா விற் பனை செய்த கோதையம்மாள்(70) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் இவருக்கு பழநி எம்.ஜி.ஆர். நகரில் வசிக்கும் இவரது மகள் அன்னலட்சுமி (40) கஞ்சா சப்ளை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸார் அன்ன லட்சுமியையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஒன்றே முக்கால் கிலோ கஞ்சாவை பறி முதல் செய்தனர். இதையடுத்து இரு வரும் மதுரை சிறையில் அடைக் கப்பட்டனர். அன்னலட்சுமி, உடுமலை கவுசல்யாவின் தாயார், கோதையம்மாள் அவரது பாட்டி ஆவார்.

திண்டுக்கல் மாவட்டம் குப்பம் பாளையத்தைச் சேர்ந்த சின்னச் சாமி, அன்னலட்சுமி தம்பதிகளின் மகள் கவுசல்யாவை இவருடன் கல்லூரியில் படித்த திருப்பூர் மாவட் டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சங்கர் காதலித்து திரு மணம் செய்துகொண்டார்.

கவுசல்யா ஜாதி மாறி திரு மணம் செய்ததால் அவரது தந்தை சின்னச்சாமி கூலிப்படை உதவி யுடன் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி சங்கரை கொலை செய் தார். ஆணவக் கொலையாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி உள்ளிட்ட 6 பேருக்கு தூக்குதண்டணை விதித்து நீதி மன்றம் தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில் கவுசல்யாவின் தாயார் அன்னலட்சுமி உள்ளிட்ட 3 பேரை நீதிமன்றம் விடுதலை செய் தது. இதையடுத்து அன்னலட்சுமி அவரது மகன் ஆகியோர் உறவினர் வீடுகளில் சில மாதங்கள் தங்கினர். கவுசல்யாவின் தம்பி கல்லூரி படிப்பை தொடர முடியாமல் கை விட்டார். பின்னர் சில மாதங்களுக்கு முன்பு பழநியில் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள வாடகை வீட்டுக்கு மீண்டும் திரும்பினர்.

வருவாய்க்கு வழியில்லாததால் தனது கணவர் சின்னச்சாமி செய்து வந்த கஞ்சா விற்பனையை தொடர முடிவு செய்த அன்னலட்சுமி, வெளி மாநிலத்தில் கஞ்சா வாங்கி சில் லறை விற்பனை செய்துவந்துள் ளார். இதுகுறித்து கிடைத்த தகவ லையடுத்து அன்னலட்சுமியின் நடவடிக்கைகளை ரகசியாக கண் காணித்த போலீஸார் முதலில் கஞ்சாவிற்ற கோதையம்மாளை யும் பின்னர் அன்னலட்சுமியையும் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x