அத்துமீறி செயல்படும் அமைச்சரின் சகோதரர்?- கோவை திமுக எம்எல்ஏ கண்டனம்

அத்துமீறி செயல்படும் அமைச்சரின் சகோதரர்?- கோவை திமுக எம்எல்ஏ கண்டனம்
Updated on
1 min read

தமிழக உள்ளாட்சித் துறை அமைச்ச ரின் சகோதரர் அத்துமீறி செயல் படுவதாக கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள அறிக்கை:

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ், கோவை உக்கடம் வாலாங்குளக்கரையில் தற்போது மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை, மாநகராட்சி அதிகாரிகளுடன், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் அண்ணன் எஸ்.பி.அன்பரசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார் என்று கோவை மாநகராட்சி நிர்வாகமே படத் துடன், செய்திக்குறிப்பையும் வெளி யிட்டுள்ளது.

அதில், 'ஸ்மார்ட் சிட்டி பணி களை, ஆணையர் ஷ்ரவன் குமார், துணை ஆணையர் பிரசன்னா ராமசாமி ஆகியோர் முன்னிலை யில், சமூக ஆர்வலர் எஸ்.பி.அன்ப ரசன் பார்வையிட்டார்' என்று கூறப் பட்டுள்ளது.

எந்த அரசுப் பதவியிலும் இல் லாமல், மக்களின் பிரதிநிதியாகவோ அல்லது ஸ்மார்ட் சிட்டி நிர்வாகி யாகவோ இல்லாமல், அதிகாரி களை அழைத்து கூட்டம் நடத்து வது, ஆய்வு நடத்துவது என்பது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையில் உள்ளது.

ஒரு தனி நபர், அரசுப் பணி களை ஆய்வு செய்வது, அரசின் பணி, கடமை, உரிமை மற்றும் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதி ராகவும், மரபுகளுக்கு மாறாக இருப்பதாகவும், சமூக ஆர்வலர் என்ற தகுதி போதும் என்றால், கோவை முழுவதும் ஏராளமான சமூக ஆர்வலர்கள் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் ஏன் ஆய்வுக்கு அழைக்கவில்லை? இதுபோன்ற ஆய்வுகளை உடனடி யாக கைவிட வேண்டும்.

எந்த அரசுப் பதவியிலும், மக்க ளின் பிரதிநிதியாகவும் இல்லாமல், உள்ளாட்சித் துறை அமைச்சரின் சகோதரர் என்ற அடிப்படையில் அரசுப் பணிகளை ஆய்வு செய் வதையும், நிர்வாகத்தில் தலை யிடுவதையும் திமுக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in