மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேக செல்போன் செயலி: அதிகாரிகள் தகவல்

மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேக செல்போன் செயலி: அதிகாரிகள் தகவல்

Published on

மாற்றுத்திறனாளிகளின் நலனுக் காக ரூ.15 லட்சம் செலவில் பிரத்யேக செல்போன் செயலியை உருவாக்க மாற்றுத்திறனாளிகள் நலத் துறை முடிவு செய்துள்ளது.

மாற்றுத்திறனாளிகள் நலத் திட்ட உதவிகளைப் பெற, அதி காரிகளை நேரில் சந்தித்து விண் ணப்பிப்பதே வழக்கமாக உள் ளது. விண்ணப்பங்களை சமர்ப் பிக்க அவர்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி உள்ளது. இதுமட்டுமின்றி, மாற்றுத்திறனாளி கள் குறித்த விவரங்கள் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையிடம் டிஜிட்டல் வடிவில் இல்லை.

இந்நிலையில், நலத்திட்டங் களுக்கு விண்ணப்பிப்பதை எளி தாக்கவும், மாற்றுத்திறனாளிகளின் விவரங்களை டிஜிட்டல் வடிவில் சேகரிக்கவும் ரூ.15 லட்சம் செலவில் செல்போன் செயலி உருவாக்க மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறிய தாவது: தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பது, நலத் திட்டங்களுக்கு விண்ணப் பிப்பது போன்றவற்றுக்காக மாற் றுத்திறனாளிகள் பல கி.மீ. தூரம் பயணிக்க வேண்டி உள்ளது. அவர்களது சிரமத்தை கருத்தில் கொண்டு, இருந்த இடத்தில் இருந்தே நலத்திட்ட உதவிகளுக்கு உடனுக்குடன் விண்ணப்பிக்க புதிய செல்போன் செயலி உரு வாக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.

இந்த செல்போன் செயலி உருவாக்கப்பட்டு, செயல் பாட்டுக்கு வந்ததும், மாற்றுத் திறனாளிகள் உள்நுழையும்போது தங்களது விவரங்களை பதிவிட வேண்டும். இதன்மூலம், மாற்றுத் திறனாளிகள் பற்றிய விவரங்கள் முழுவதும் டிஜிட்டல் வடிவில் பாதுகாக்கப்படும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in