

உரிய சட்டவிதிகளை பின்பற்றா மல் ஒப்பந்தப் பணியாளர்களை பின்வாசல் வழியாக பணி நிரந்தரம் செய்யக் கூடாது என்று அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியத்தில் ஒப்பந்த பணியாளர்களாக பணி யாற்றிய தமிழ்வேந்தன் உள் ளிட்ட 33 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய் திருந்த மனுவில், ‘‘தமிழ்நாடு குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியம் சார்பில் வேதாரண்யத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக் காக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டோம்.
2003 முதல் 2008 வரை பணிபுரிந்துள்ளோம். தொடர்ச்சி யாக 2 ஆண்டுகளுக்கு 480 நாட் கள் பணிபுரிந்துள்ளதால் எங் களை பணிநிரந்தம் செய்யுமாறு தொழிலாளர் நலத்துறை ஆய் வாளர் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’’ என கோரியிருந்தனர்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் பாக நடந்தது. அப்போது நீதிபதி, ‘‘குடிநீர் மற்றும் வடிகால் வாரிய சட்டத்தில் தனியாக பணிவிதிகள் உள்ளன. மேலும் தமிழ்நாடு தொழில் அமைப்புகள் பணிநிரந்தரச் சட்டத்தின் அடிப் படையில் ஒப்பந்தப் பணியாளர் களை பணி நிரந்தரம் செய்ய முடியாது.
2 ஆண்டுகளுக்கு 480 நாட் கள் பணியாற்றி உள்ளனர் என்பதற்காக பணிநிரந்தரம் வழங்க முடியாது. அரசு அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள் தங் களின் தேவைக்காக தினக்கூலி அ டிப்படையில், விருப்பப்பட்டவர் களை ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்கின்றனர்.
அடிப்படை உரிமை
பின்னர் உரிய சட்டவிதிகளை பின்பற்றாமல் அவர்களை நிரந்தரம் செய்வது சட்டவிரோத மானது. இவ்வாறு பின்வாசல் வழியாக பணிநிரந்தரம் செய்வது என்பது தகுதியான விண்ணப்ப தாரர்களின் அடிப்படை உரி மையை பறிக்கும் செயல்.
எனவே ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்தவர்கள், பணி நிரந்தரம் கோர முடியாது என்பதால் வழக்கை தள்ளுபடி செய்கிறேன்" என உத்தரவிட்டுள்ளார்.