

குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் சாலையோர வியாபாரி களிடம் கிடைக்கும் பனை உணவுப் பொருட்களை விரும்பி வாங் கிச் செல்கின்றனர். இதனால், வியா பாரிகள் மகிழ்ச்சி அடைந்துள் ளனர்.
கற்பகத்தரு என அழைக்கப் படும் பனை மரத்தின் வேர் முதல் உச்சி வரை அனைத்து பொருட்களும் மக்களுக்கு பயன் படக் கூடியவை. பனங்கிழங்கு, நுங்கு, பதநீர், தவுண், பனங் குருத்து, பனம்பழம் உள்ளிட்ட உணவுப் பொருட்களும், பதநீரில் இருந்து கருப்பட்டி, பனங்கற்கண்டு உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுப் பொருட்களும் கிடைக் கின்றன.
தென்காசி - திருநெல்வேலி சாலையோரத்தில் ராமச்சந்திர பட்டணம், பாவூர்சத்திரம் பகுதி யில் மத்தளம்பாறை, ராமச்சந்திர பட்டணம், திரவிய நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் தவுண், பனங்குருத்து, பனங் கிழங்கு ஆகியவற்றை விற்பனை செய்து வருகின்றனர். குற்றாலத் துக்கு சுற்றுலா வரும் பயணிகள் ஆர்வத்துடன் இவற்றை வாங்கிச் செல்கின்றனர்.
இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறும்போது, “பனையில் இருந்து கிடக்கும் தவுண் உட லுக்கு குளிர்ச்சியை தரும். திகட் டாத சுவையுடன் இருக்கும். பனங் கொட்டைகளை சேகரித்து, மண் ணில் பதித்து வைத்து, 2 மாதம் கழித்து எடுத்து, அந்த கொட்டையை அரிவாளால் இரண்டாக வெட்டி னால், உட்புறத்தில் தவுண் இருக் கும். பனையோலை பட்டையில் 20 துண்டுகள் வரை வைத்து விற்பனை செய்கிறோம்.
ஒரு பட்டை தவுணை 50 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். அக் டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை கெட்டித் தவுண் கிடைக் கும். மற்ற காலங்களில் பனங் கொட்டைகளை மண்ணில் வைத்து, எடுத்து வெட்டினால் அதில் கெட்டித் தவுண் இருக்காது. நீர் கலந்து இருக்கும். அதை கஞ்சித் தவுண் என்பார்கள்.
பனங்கொட்டையை மண்ணில் 4 மாதங்கள் பதித்து வைத்து, எடுத்தால் பனங்கிழங்கு கிடைக் கும். 20 முதல் 25 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப் படுகிறது. பனங்குருத்தை மெல்லி யதாக அரிவாளால் சீவி விற்பனை செய்கிறோம். ஒரு பட்டை பனங் குருத்து 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
குற்றாலத்துக்கு சுற்றுலா வரும் பெரும்பாலானோர் பனை உணவுப் பொருட்களை விரும்பி வாங்குகின்றனர். பனங்கொட் டையை கவனமாக வெட்டி எடுப் பது சிரமமாக இருக்கும். அதனால், தவுண் உணவுப் பொருள் அரி தாக சில இடங்களில் மட்டுமே கிடைக்கிறது. இயற்கையாக கிடைக்கும் உணவுப் பொருள் என்பதால், மக்கள் விரும்பி உண்கின்றனர்.
நாள் ஒன்றுக்கு ரூ.700 வருமானம்
பனை மரங்களை குத்த கைக்கு எடுத்தும், சொந்த மரங் களில் இருந்தும், காட்டுப் பகுதி களில் விழுந்து கிடக்கும் பனம் பழங்களை சேகரித்தும் மண்ணில் பதித்து வைத்து, எடுத்து வியாபாரம் செய்கிறோம். இதன் மூலம் நாளொன்றுக்கு 700 முதல் ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது” என்றார்.