Published : 01 Dec 2019 07:46 AM
Last Updated : 01 Dec 2019 07:46 AM

60,000 பேருடன் இந்தியா முழுவதும் ரத்த தானம்; சேவை மனப்பான்மையுடன் பல உயிர்களை காப்பாற்றும் மதுரை பெண்மணி

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை

மதுரையைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், தனது தலைமையில் 60,000 பேருடன் இந்தியா முழுவதும் உயிருக்குப் போராடும் நோயாளிகளுக்கு ரத்த தானம் செய்து தினமும் பல உயிர்களைக் காப்பாற்றி வருகிறார்.

சுவாசத்துக்கு சிரமப்பட்டால் செயற்கை சுவாசம் வழங்கி உயிரைக் காப்பாற்றலாம். ஆனால் ரத்தம் இல்லாவிட்டால் மற்றவர்கள் அதே குரூப் ரத்தத்தை தானம் செய்தால் மட்டுமே உயிருக்குப் போராடுவோரைக் காப்பாற்ற முடியும்.

அந்த தானத்தை மதுரை அய்யர் பங்களாவைச் சேர்ந்த ஷர்மிளா என்பவர் தனது நண்பர்கள் 60,000 பேருடன் சேர்ந்து இந்தியா முழு வதும் செய்து வருகிறார். அடிப் படையில் பள்ளி ஆசிரியரான அவர் தனது பணி நேரத்துக்கு இடையே இந்த சேவையை செய்கிறார்.

இதுகுறித்து ஷர்மிளா கூறியதாவது: மதுரையில் ரத்த தானம் செய்வதற்காக கல்லூரி மாணவர் கள் சேர்ந்து பூம் (Boom) என்ற அமைப்பை 2011-ம் ஆண்டு தொடங் கினர். அவர்களால் இந்த அமைப் பைத் தொடர்ந்து நடத்த முடியாத தால், இதில் ஒரு உறுப்பினராக இருந்த நான் எடுத்து நிர்வகிக்க ஆரம்பித்தேன்.

எனது தலைமையில் இந்த அமைப்பில் 16 ஒருங்கிணைப்பாளர் கள், அவர்களுக்கு கீழ் அரசு, தனி யார் நிறுவன ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என்று 60,000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் 40,000 பேர், எந்த நேரம் அழைத்தாலும் ரத்த தானம் செய்யத் தயாராக உள்ளனர்.

‘பேஸ் புக்’, ‘வாட்ஸ் அப்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வரும் தகவல்கள் அடிப்படையிலும், நேரடியாக எங்களைத் தொடர்பு கொள்வோருக்கும் நாங்களே தேடிச் சென்று ரத்த தானம் செய்கிறோம். அதற்காக நேரம், காலம் பார்ப்பதில்லை. நள்ளிரவு அழைத்தாலும், எங்கள் குழுவில் உள்ள ஒருங்கிணைப்பாளர்களிடம் சொல்லி அவர்கள் மூலம் உறுப்பினர்களை உடனடியாக ரத்த தானம் செய்ய அனுப்புகிறோம்.

அவர்களும் எந்த சன்மானமும் இல்லாமல் இந்த சேவையை செய்கிறார்கள். ஆரம்பத்தில் எங்கள் முழுக் கவனமும் மதுரை மட்டுமே இருந்தது. ஆனால், எங்கள் குழுவில் கல்லூரி மாணவர் களாக சேர்ந்தவர்கள், ஒரு கட்டத்தில் படித்து முடித்து வேலை நிமித்தமாகவும், குடும்பரீதியாகவும் வெவ்வேறு மாநிலங்கள், நகரங் களுக்கும், நாடுகளுக்கும் செல்கின் றனர். அதனால், எந்த ஊரில் ரத்தம் தேவைப்பட்டாலும், அங்கு எங்கள் உறுப்பினர்களை அனுப்ப முடிகிறது.

புற்றுநோயாளிகள், ரத்தப்போக் குள்ள கர்ப்பிணிகள், ரத்தக்கசிவு ஏற்படும் அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு உடனே ரத்தம் கொடுத்தாக வேண்டும். அதுவே குழந்தையாக இருக்கும்போது மேலும் கஷ்டம். அப்போது அவர் கள் ரத்தம் கிடைக்காமல் தவிப்பார் கள். அவர்களுக்கு நாங்கள் செலவே இல்லாமல் ரத்த தானம் செய்கிறோம்.

தற்போது எங்கள் குழுவில் புற்றுநோயாளிகளுக்கு ரத்த தானம் செய்வதற்கு மட்டுமே 45 பேர் அடங்கிய தனி குழுவை உருவாக்கி உள்ளோம். அவர்கள் அந்த நோயாளிகளுக்கு மட்டும்தான் ரத்தம் கொடுப்பார்கள். எங்கள் குழுவில் யாரும், யாருக்காகவும் வேலை பார்க்கவில்லை. ரத்தம் தேவைப்படும் ஒவ்வொரு உயிரை யும் காப்பாற்ற வேண்டும் என்கிற மனிதாபிமானத்துக்காகவும், சேவைக்காகவுமே எங்கள் அன்றாடப் பணிகளுக்கு இடையே இதை செய்கிறோம்.

எங்கள் சேவைக்காக இது வரை 27 விருதுகள் வாங்கி உள் ளோம். இந்த விருதுகளில் பெருமை யில்லை. தினமும் பல உயிர் களைக் காப்பாற்றுகிறோம் என் பதில்தான் எங்களுக்குப் பெருமை இருக்கிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x