

கல்கி இதழ்கள் குழுமத்தின் பவள விழா சென்னையில் இன்று மாலை நடக்கிறது.
கல்கி இதழ்கள் குழுமத்தின் 75-வது ஆண்டு பவள விழா சென்னையில் இன்று நடக்கிறது. தி.நகரில் உள்ள சர். பிட்டி தியாக ராயர் அரங்கில் மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்த விழாவுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் தலைமை தாங்குகிறார். கல்வி யாளர் பி.கே.கிருஷ்ணராஜ வானவராயர், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், பத்திரிகையாளர் திருப்பூர் கிருஷ்ணன் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
கல்கி குழும இதழ்களின் மேம்பாட்டுக்கு பங்களிப்பு செய்த மூத்த படைப்பாளர்கள் அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, சிவசங்கரி, மாயா, ராமு, தாமரை, ஹரிஹரன், சாருகேசி, சுப்ரபாலன், பிரியன் சீனிவாசன், எஸ்.சந்திரமவுலி ஆகியோர் விழாவில் கவுரவிக்கப் படுகின்றனர்.
பவள விழாவை முன்னிட்டு குறும்பட போட்டி நடத்தப்படுகிறது. கல்கி விருதுகளும் வழங்கப்படு கின்றன.
இதுதவிர, கல்கி குழுமத்தில் இருந்து வெளியாகும் 5 இதழ்கள் சார்பில் கருத்தரங்குகள், மாண வர்கள் இதழியல் பயிற்சி, பெண்கள் மருத்துவ முகாம், கோயில் உழவாரப் பணிகள், குழந்தைகள் மாநாடு ஆகியவை நடைபெறும் என கல்கி வார இதழ் பொறுப்பாசிரியர் ஆர்.வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.