

சென்னை
தமிழகத்தில் அனைத்து உள்ளாட்சி களிலும் தேர்தல் முன்னேற்பாடுகள் முடிவடைந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு நாளை (டிச.2) வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட் சிகள், 12,524 கிராம ஊராட்சிகள், 99,333 கிராம ஊராட்சி வார்டுகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 6,471 ஊராட்சி ஒன்றியக் குழு வார்டுகள், 31 மாவட்ட ஊராட்சிகள், 655 மாவட்ட ஊராட்சி வார்டுகள் உள்ளன.
இவற்றுக்காக தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பதவிக் காலம் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முடிவடைந்தது. அப்பதவிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், பழங் குடியினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கக் கோரி திமுக தொடர்ந்த வழக்கில், அந்த தேர்தல் அறி விப்பாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. பின் னர் பல்வேறு காரணங்களால் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தள்ளிப்போடப்பட்டு வந்தது.
இதற்கிடையே, உள்ளாட்சி தேர் தலை நடத்தக் கோரி உச்ச நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அக். 31-ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் உறுதி அளித் திருந்தது. பின்னர் 4 வாரங்கள் அவ காசம் கோரிய மாநில தேர்தல் ஆணையம், டிச. 2-ம் தேதிக்குள் தேர்தல் தேதியை அறிவிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் உறுதி அளித்து இருந்தது. இறுதியாக டிச.13-ம் தேதிக்குள் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு, அதன் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.
இதைத் தொடர்ந்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் பல் வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்திய மாநில தேர்தல் ஆணை யர் ஆர்.பழனிசாமி, வாக்குப் பதிவு இயந்திரங்களைத் தயார்படுத்து தல், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் நிய மனம், அவர்களுக்கு பயிற்சி வழங் குவது, வாக்குச் சாவடிகளை தயார்படுத்துதல், மாற்றுத் திறனாளி களுக்கான சாய்வுதள வசதி, மின்சார வசதிகள் உள்ளிட்ட அடிப் படை வசதிகளை உறுதி செய்தல் என பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி இருந்தார். தற்போது அனைத்து தேர்தல் ஏற்பாடுகளும் முடிவடைந்து விட்டதாகக் கூறப் படுகிறது. வரைவு வாக்காளர் பட்டி யலும் ஏற்கெனவே வெளியிடப்பட் டுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளி யிட்டவுடன் இறுதி பட்டியலை வெளி யிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சிகளுடனும் மாநில தேர்தல் ஆணையம் ஆலோ சனை நடத்தியது. அதில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு மறுவரையறை புதிதாகச் செய்ய வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று திமுகவும், எக்காரணம் கொண்டும் தேர்தலை நிறுத்தாமல், உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி நடத்த வேண்டும் என்று அதிமுக வும் வலியுறுத்தி இருந்தது.
தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி டிசம்பர் 2-ம் தேதிக்குள் அறி விப்பை வெளியிடுதல் மற்றும் உள்ளாட்சி தேர்தலை நடத்து வது தொடர்பாக உச்ச நீதிமன்றத் தில் அறிக்கை தாக்கல் செய்வதற் கான காலக்கெடு நெருங்கி வருவ தால், தேர்தலை அறிவிக்க வேண் டிய கட்டாயத்தில் மாநில தேர்தல் ஆணையம் உள்ளது.
அதனால், தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. மேலும், இரண்டு கட்டங்களாக தேர்தலை நடத்துவது என்றும், ஊரக உள்ளாட்சிகளுக்கு முதற்கட்டமாகவும், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு 2-ம் கட்டமாக வும் தேர்தலை நடத்த திட்ட மிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சிலரிடம் கேட்டபோது, ‘‘மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்படி மாந கராட்சி சார்பில் அனைத்து முன் னேற்பாடுகளும் செய்யப்பட்டுள் ளன. அறிவிப்பு வெளிவந்த உட னேயே தேர்தல் பணிகளில் ஈடுபட தயார் நிலையில் இருக்கிறோம்’’ என்றனர்.