விருதுநகர் ஆட்சியர் அலுவலக முகநூல் பக்கத்தில் மாறாத கலெக்டரின் படம்: விசுவாசத்தின் விளைவா?

இடது முன்னாள் ஆட்சியர் சிவஞானம், வலது தற்போதைய ஆட்சியர் இரா.கண்ணன்
இடது முன்னாள் ஆட்சியர் சிவஞானம், வலது தற்போதைய ஆட்சியர் இரா.கண்ணன்
Updated on
1 min read

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கென தனியாக முகநூல் பக்கம் ஒன்று இருக்கிறது. அந்தப் பக்கத்தில் இன்னமும் பழைய ஆட்சியர் சிவஞானம் ஐஏஎஸ்.,ஸின் படமே உள்ளது. படமும் மாற்றப்படவில்லை ஆட்சியரின் பெயரும் மாற்றப்படவில்லை.

விருதுநகர் மாவட்ட ஆட்சியராக கடந்த 31.07.2016-ல் பொறுப்பேற்றவர் சிவஞானம் ஐஏஎஸ். 3 ஆண்டு கால சேவைக்குப் பின் இவர் அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டார்.

இவருக்குப் பதிலாக கடந்த 18.11.19-ல் இரா.கண்ணன் ஆட்சியராகப் பொறுப்பேற்றார். ஆனால், இன்றைய தேதி வரை ஆட்சியர் அலுவலக முகநூல் பக்கத்தில் விருதுநகர் ஆட்சியர் சிவஞானம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட செய்தி தொடர்பு அதிகாரிகள் மட்டத்தில் விசாரித்தபோது இது குறித்து தங்களுக்குத் தெரியாது என்று கைவிரித்தனர். ( https://www.facebook.com/collvnr.collvnr )

ஆனால், உண்மையில் ஆட்சியர் அலுவலக முகநூல், சமூக ஊடகப் பக்கங்களை நிர்வகிப்பது பிஆர்ஓ., அதிகாரிகளின் வேலையே. எனவே, மழுப்பலாக அவர்கள் பதில் சொல்வதால் பழைய விசுவாசம் காரணமாக இன்னமும் புகைப்படத்தைப் பெயரை மாற்ற மனமில்லையோ என்று ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுக்கள் அடிபடுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in