

உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி ஓய்வுப்பெற்றதை அடுத்து புதிய உள்துறைச் செயலராக நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை செயலாளராக இருக்கும் எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைமைச் செயலர், உள்துறைச் செயலர் பதவி இரண்டும் அரசுத்துறையில் முக்கிய நிர்வாகப்பணிகளாகும். ஐஏஎஸ் அதிகாரிகளின் கனவுப்பணியாகும். இந்தப்பதவிக்கு வருவதற்கு பலருக்குள்ளும் போட்டியிருக்கும். முதல்வருக்கு கீழ் வரும் காவல்துறையை நிர்வாகிப்பது இந்தத்துறைதான்.
தற்போது ஓய்வுப்பெற்ற உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி 1986-ம் ஆண்டு பேட்ச் அதிகாரி ஆவார். அவருக்கும் சீனியர் அதிகாரிகள் 1985-ம் ஆண்டு பேட்ச் அதிகாரிகள் 7 பேர் உள்ளனர். இதில் சண்முகம் தலைமைச் செயலாளராக உள்ளார்.
அவரைத்தவிர 1.வி.கே.ஜெயக்கொடி, 2.மீனாட்சி ராஜகோபால் 3.ரோல்கும்லின் பஹ்ரில் 4.ராஜிவ் ரஞ்சன் 5.சந்திரமவுலி 6. ஜக்மோகன் சிங் ராஜு உள்ளிட்ட 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இருந்தனர்.
இதற்கு அடுத்த இடத்தில் 1988-ம் ஆண்டு பேட்ச் வரை 12 அதிகாரிகள் உள்ளனர். தற்போது உள்துறைச் செயலராக நியமிக்கப்பட்ட இவரது எஸ்.கே. பிரபாகர் .1989-ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். முதல்வரின் துறைச் சார்ந்த அதிகாரியாக பதவி வகிக்கிறார் பிரபாகர். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி, சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம்.
அரசின் பல்வேறு முக்கிய துறைகளின் செயலாளராக இருந்தவர். கருணாநிதி முதல்வராக இருந்த போது முதலமைச்சரின் செயலாளர் 4 ஆக இருந்தார். கவல் தொழில்நுட்பவியல் துறை செயலாளர் , வணிகவரித்துறை செயலாளர் மற்றும் ஆணையர், பொதுப்பணித்துறை செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.
பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியராக பொறுப்பு வகித்துள்ளார், கடைசியாக முதல்வரி துறையான நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை செயலாளராக இருந்தார். இவர் பொறியியல் முதுகலை பட்டம் பயின்று பின்னர் சிவில் தேர்வெழுதி ஐஏஎஸ் ஆனார். 1966-ம் ஆண்டு பிறந்த இவர் 2026-ம் ஆண்டு ஓய்வு பெறுகிறார்.