Published : 30 Nov 2019 11:16 AM
Last Updated : 30 Nov 2019 11:16 AM

உள்ளாட்சி தேர்தலை கண்டு அஞ்சுபவர்கள் அதிமுகவினர்: திமுக பொருளாளர் துரைமுருகன் குற்றச்சாட்டு

உண்மையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் தைரியம் ஆளுங்கட்சிக்குத்தான் இல்லை என திமுக பொருளாளர் துரை முருகன் குற்றஞ்சாட்டினார்.

வேலூர் மத்திய மாவட்ட அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர் காணலை திமுக பொருளாளர் துரைமுருகன் நேற்று நடத்தினார். அப்போது, மாவட்டச் செயலாளர் ஏ.பி.நந்தகுமார், மாவட்ட அவைத் தலைவர் முகமது சகி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் துரைமுருகன் செய்தி யாளர்களிடம் கூறும்போது, ‘‘உள் ளாட்சி தேர்தலைக் கண்டு ஸ்டாலின் அஞ்சுகிறார் என்று முதல்வர் பழனிசாமி சொல்லியிருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. தேர்தலை நடத்துகிற தைரியம் ஆளுங்கட்சிக்கு இல்லை என்பது தான் உண்மை. அந்த தைரியம் இருக்குமானால், தேர்தலுக்கான ஏற்பாடுகளை முறையாக செய்தி ருப்பார்கள்.

அப்போதுதான் நீதிமன்றத்துக்கு போனாலும் எந்த தடையும் இருக்காது. எந்தெந்த ஒன்றியங்கள் எந்த மாவட்டத்தில் இருக்கிறது என தெரியப்படுத்தாமல் இருக்கிறார் கள். எதையும் திட்டமிட்டு செய்யா மல் ஏனோதானோ என வேண்டு மென்றே செய்திருக்கிறார்கள். இதை வைத்து யாராவது உச்ச நீதிமன்றம் சென்றால் அதை வைத்தே தேர்தலை நிறுத்திவிட லாம் என்று நினைக்கின்றனர். உண்மையில் தேர்தலைக் கண்டு அஞ்சுகிறவர்கள் எடப்பாடி அணியி னர்தான். மத்திய அரசுடன் இவர்கள் இணக்கமாக இருந்து என்னென்ன திட்டங்கள் வாங்கியிருக்கிறார்கள் என்று பட்டியல் கொடுக்கச் சொல் லுங்கள். கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு நிதி வாங்குவதில் எத்தனை ஆண்டுகள் வீணடிக்கப் பட்டது என சொல்ல முடியுமா? எழுதிக் கொடுப்பதை படித்து விட்டுப் போகிறார் முதல்வர் அவ்வளவுதான்.

கர்நாடகத்தில் உள்ள அரசியல் வாதிகளுக்கு பொழுது போகா விட்டால் மேகேதாட்டுவில் அணை கட்டுவோம் என்று கூறுவார்கள். ஆனால், அதை எப்போதும் தமிழகம் திட்டவட்டமாக எதிர்க்கும். வேலூர் மாவட்டத்தை பிரித்துவிட்டு மருத்துவமனை கட்டுவோம், தடுப் பணை கட்டுவோம் என்று முதல்வர் அறிவித்துள்ளார். கடந்த 9 ஆண்டு களாக இதையெல்லாம் அவர்கள் செய்யவில்லை என்றுதான் அர்த் தம். மாவட்டம் பிரிப்பதை எல்லாம் நாங்கள் எதிர்க்கவில்லை. அவராக நினைத்துக் கொண்டு ஏதோ ஒன்றை பேசுகிறார்.

பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் மிகப்பெரிய பிரச்சினைகள் உள் ளன. மாவட்டத்தை பிரித்த பிறகு பெரிய திட்டங்களை அறிவிப்பார் என்று பார்த்தால் அதுவும் இல்லை. இந்த மாவட்ட மக்கள் நம்பி இருக் கும் பாலாறு பிரச்சினை குறித்து ஏதாவது முடிவு எடுக்கப்படும் என் றாரா? தண்ணீர் பிரச்சினை இருக்கி றது. அதுகுறித்தெல்லாம் முதல்வர் அறிவிக்கவில்லை’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x