ஜெயலலிதாவின் 3-ம் ஆண்டு நினைவு தினம்: ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்பு; அதிமுக அறிவிப்பு

ஜெயலலிதா: கோப்புப்படம்
ஜெயலலிதா: கோப்புப்படம்
Updated on
1 min read

ஜெயலலிதாவின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தன்று, ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நடைபெறும் என, அதிமுக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சி தலைமைக்கழகம் இன்று (நவ.30) வெளியிட்ட அறிவிப்பில், "தமிழக மக்கள் அனைவரது இதயங்களிலும் நிரந்தரமாக வீற்றிருக்கும் ஜெயலலிதா நம்மையெல்லாம் ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டு அமரர் ஆகிய நாள் 5.12.2016.

ஜெயலலிதாவின் 3-ம் ஆண்டு நினைவு நாளான 5.12.2019, வியாழக் கிழமை காலை 10 மணியளவில், சென்னை, அண்ணாசாலையில் அமைந்துள்ள அண்ணா சிலையில் இருந்து, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் ஊர்வலமாகப் புறப்பட்டு, ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்த உள்ளார்கள். அதனைத் தொடர்ந்து, நினைவிட வளாகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சிகளில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும், கழக நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களும்; முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களும் அதிமுகவின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்"

இவ்வாறு அந்த அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in